Friday, May 24, 2024

வைகாசி அனுஷம் வள்ளுவர் ஜென்ம நக்ஷத்திரம்

1971ம் ஆண்டு வரை வைகாசி அனுஷம் அன்றே திருவள்ளுவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்தது. எவ்வித காரணமுமின்றி தை 1 தான் வள்ளுவர் பிறந்த நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் தை 1 இல்லை தை 2 வள்ளுவர் பிறந்தநாள் என்றும் மாற்றப்பட்டது. இன்றைக்கும் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில், சென்னைத் திருவள்ளுவர் மன்றம், தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைகாசி அனுஷம் அன்றே, வள்ளுவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது.
வள்ளுவரின் பிறந்தநாள் தை 2 என்று வாதிடுபவர்கள் மிகவும் பின்னோக்கி எல்லாம் செல்ல வேண்டாம், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை தெரிந்துக்கொண்டாலே போதும். 1935 மே மாதம்18 ஆம் நாள், அனுஷநட்சத்திர நாள். அன்றைய தினம் திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலை அடைந்துதிருவள்ளுவர் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.அன்றைய தினம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப்போதும் வைகாசி அனுஷம் அன்று தான் கோவிலில் வள்ளுவருக்கு விழா எடுக்கப்படுகிறது.
மறைமலை அடிகள், கா. நமச்சிவாய முதலியார், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், T.செங்கல்வராயன் உள்ளிட்ட பல அறிஞர்கள் இதில் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு வைகாசி அனுஷம் அன்று நடைபெற்ற வள்ளுவர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தலைமயேற்றவர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். சுவாமி சித்பவானந்தா,கி.வா. ஜகந்நாதன், அமரர் கல்கி உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களும் வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் முன்னாள் முதல்வர் அண்ணா, பெரியார் ஆகியோரும் கூட வைகாசி அனுஷம் வள்ளுவர் பிறந்த தினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கூட 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

Tuesday, February 13, 2024

வசந்த பஞ்சமி கொண்டாடுவது ஏன்

இன்று (14.02.2024) வசந்த பஞ்சமி.  தமிழகத்தில் சரஸ்வதி பூஜையானது நவராத்திரியுடன் கொண்டாடப்படுகிறது.  பாரதத்தின் பல மாநிலங்களில் வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவி படத்தின் முன்பு புத்தகங்களை வைத்து, மலரால் பூஜித்து வழிபடுகிறார்கள்.  காளிதாசர் முன் சரஸ்வதி தேவி தோன்றி அவருக்கு ஞானம் வழங்கிய நாள் என்பதால் இந்த தினம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 
காளிதாசர் கொண்டாடப்பட வேண்டியவர், பிற்காலத்தில் சில அறிவீலிகள் தோன்றக்கூடும் என்று எப்போதோ தனது காவியங்கள் மூலம் வாயை அடைத்து விட்டார்.  அது பற்றி, கட்டுரையின் கடைசியில் உள்ளது. வசந்த பஞ்சமி என்பது காதலர் தினமாக கூட மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.  காதலர்களுக்கு என்று ஒரு தினமா ? இந்த மேற்கத்திய கலாச்சாரம் எதற்கு இங்கு என்று சிலருக்கு ஐயம் எழலாம். நமது கொண்டாட்டங்களும், மேற்கத்திய கொண்டாட்டங்களுக்கு வித்தியாசம் உண்டு.  அவர்களுக்கும் புத்தாண்டு உண்டு, நமக்கும் புத்தாண்டு உண்டு, அந்த கொண்டாட்டம் எப்படியுள்ளது, நமது கொண்டாட்டங்கள் எப்படியுள்ளது. அதுதான் வித்தியாசம். வசந்த பஞ்சமி அன்று காதலர்கள் என்ன செய்வார்கள்? ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது தற்காலிகமாக ஏற்படுத்தப்படும் வழிபாடு தலங்கள். தற்காலிகம் என்பதால் மேலே ஓடு கூட இருக்காது, ஷாமியானா மட்டுமே இருக்கும், அதனால் பந்தல் என்று அழைக்கிறார்கள். இந்த இடங்களுக்கு சென்று வழிபடுவார்கள், திருமணம் கைகூட பிரார்த்தனை செய்வார்கள், அவ்வளவு தான். இந்த ஆண்டு மட்டும் பிப்ரவரி 14 அன்று வருகிறது. மற்ற ஆண்டுகளில் வெவ்வேறு தேதிகளில் இது வரும். இந்த வசந்த பஞ்சமி காதலர் தினமாக ஏன் அழைக்கப்படுகிறது?சூரபத்மன், தாரகாசுரனின் அட்டகாசங்கள் அதிகரித்து வந்தன, அவனை சிவனின் மகன் மட்டுமே அழிக்க முடியும். ஆனால் சிவனோ ஆழந்த தவத்தில் இருந்தார். எனவே தேவர்களின்  வேண்டுகோளை ஏற்று, மன்மதன் தனது அம்புகளை ஏவி அவரது தவத்தை கலைத்தான்.  நெற்றிக் கண்ணை திறந்த ஈசன் மன்மதனை சாம்பலாக்கினார். சிவபெருமான் உள்ளே இருந்த அந்த ஆற்றல், அங்கே கிடத்தப்பட்டது, மிகவும் வெப்பமாக இருந்த அந்த ஆற்றலை சரவண பொய்கையில் தேவர்கள் சேர்க்க, சில நாட்களுக்கு பிறகு ஆறுமுகப் பெருமான் அவதாரம் நிகழ்ந்தது. மன்மதன் சாம்பலானாவுடன் அவனது மனைவி ரதிதேவி சிவபெருமானிடம், தனது கணவன் இவ்வாறு செய்ய காரணம் என்னவென்று விளக்கினாள்.  உடனே சிவபெருமான், நீ 40 நாட்கள் தவம் இருந்தால், உன் கணவனை மீட்கிறேன் என்று வாக்களித்தார். அதன்படி 40 நாட்கள் கடும் தவம் மேற்கொண்ட ரதி, தனது தவத்தை பூர்த்தி செய்த நாள் இந்த வசந்த பஞ்சமி.
காளிதாசர் ஏன் போற்றப்பட வேண்டியவர்? காளிதாசர் எழுதிய மகா காவியங்கள் ரகுவம்சம், குமார சம்பவம், அபிஞான சாகுந்தலம், மேகதூதம், விக்ரமோத்சவம். ரகுவம்சத்தில்  ராமனின் மூதாதையர் துவங்கி ராமர் மற்றும் அவர் சந்ததிகளையும்,  குமார சம்பவத்தில் முருகப்பெருமானையும், அபிஞான சாகுந்தலத்தில் பரத சக்கரவர்த்தியை பற்றியும் அல்லவா பாடிவிட்டு சென்றுள்ளான்.  பரதனில் இருந்து தானே மஹாபாரதம் !  இப்படி மாபெரும் காப்பியங்களை ஒருவரே படைத்துள்ளார் என்றால், ராமனும் சரி, முருகனும் சரி பாரத தேசம் முழுவதற்கும் உரியவர்கள் என்பதால் தானே.  இங்குள்ள சிலர் ராமர் வடநாடு, முருகன் தமிழ்நாடு என்றெல்லாம் கூறுவது பிதற்றல் தானே ?
நிறைவாக, தமிழர்களுக்கு முருகர் மட்டுமே கடவுள் என்று குதர்க்கத்துடன் வாதிடுபவர்களுக்கு  கச்சியப்ப சிவாச்சாரியார் 12ம் நூற்றாண்டு வாக்கில் தமிழில் கந்த புராணம் எழுதினார். அதற்கு சில நூற்றாண்டுகள் முன்பு காளிதாசர் மேலே சொன்ன குமாரசம்பவத்தை சம்ஸ்க்ருதத்தில் எழுதினார்.இது இரண்டுமே கலியுகத்தில்.  துவாபர யுகத்தில் வாழ்ந்த வேத வியாசர் ஸ்கந்த புராணம் எழுதினார், அதுவும் முருகன் குறித்து தான்.  இன்னும் நிறைவாக, வால்மீகி ராமாயணத்தில், விஸ்வாமித்ரர் ராம - லக்ஷ்மணர்களை தன்னுடன் காட்டிற்கு அழைத்து செல்கிறார், இருவரும் பாலகர்கள், அப்போது முனிவர் அவர்களுக்கு பல கதைகள் சொல்கிறார், அவற்றில் முக்கியமானது முருகப்பெருமானின் அவதார சரித்திரம்.  புரியும்படி சொல்ல வேண்டுமானால், முருகனின் அவதாரம் குறித்து ராமாயணத்திலேயே பாடல்கள் உள்ளன. எனவே ராமன், கிருஷ்ணர், முருகன், விநாயகர், ஐயனார், அம்பிகை எல்லோருமே ஹிந்துக்கள் அனைவருக்கும் உரியவர்கள் தான். 

Monday, May 15, 2023

மது ஒழிப்பு : ஆன்மீக மாடலும் - திராவிட மாடலும்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டுமே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகள்.  நன்கு படித்து, பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கே மதுவினால் ஏற்படும் தீமைகள் புரியாத போது, இந்த கிராம மக்களுக்கு சாராயம் குடிப்பதால் வரும் தீமைகள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்த முடியாது  என்று சிலர் பிதற்றுகிறார்கள். டாஸ்மாக்கை ஒழித்து விட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என்றும் சில உளறல்களையும் காண முடிகிறது.   சித்தாமூரை போன்றே இருந்த ஒரு கிராமம், அதுவும் இதே மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமம், இன்று மது அரக்கனை ஒழித்துள்ளது. இதை  சாத்தியமாக்கியது திராவிட மாடல் அல்ல, மாறாக ஆன்மீக மாடல், சனாதன தர்மம் மாடல்.



மதுராந்தகம் அருகே நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் எனும் ஆசிரமம் மற்றும் பாரத மாதா கோவில் எழுப்பியுள்ளார் சுவாமி பிரம்ம யோகானந்தா ஸ்வாமிகள். ஆன்மீகத்தின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு சமூக மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் இவர்.  இதற்கு ஒரு உதாரணம், நீலமங்கலம் அருகே உள்ள திருக்குன்னத்தூர் கிராமம். சுற்றுவட்டார கிராமம் போல இதுவம் சமூக மதுரம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தது. அந்த மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தினார் சுவாமிகள்.  அந்த கிராமத்தில் ஸ்ரீ மஹா நாராயண ஸ்வாமி கோவில் கட்டினார் மற்றும் முத்து மாரியம்மன் கோவிலை புனர் நிர்மாணம் செய்தார். அங்கு வசித்த பட்டியல் சமுக மக்களுக்கு ஆன்மீக நெறிகளை போதித்தார்.  





கோவில் கட்டுமானம் துவங்கியதில் இருந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அந்த ஊர் மக்கள் அசைவம் சாப்பிடுவது  மற்றும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தனர். கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.  பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை நோக்கி அந்த கிராமம் பயணித்து வருகிறது   இதை ஆன்மீகத்தின் மூலம் சாதித்து காட்டினார் சுவாமிஜி. 





அம்மன் கோவில்கள், முருகன் கோவில்கள், சபரிமலை விரதம் இருந்த பிறகு குடிப்பழக்கத்தை விட்டவர்கள் பல ஆயிரக்கணக்கான பேர்.  ஆன்மீகத்தின் மூலம் எதுவும் சாத்தியம். இது தான் சனாதன தர்மத்தின் பெருமை.  மக்களுக்கு ஆன்மீக அறிவு வந்துவிட்டால் அவர்களின் சிந்தனை மற்றும் செயலில் தெளிவு வந்து விடும். அந்த தெளிவு வந்துவிட்டால், தங்கள் பிழைப்பு சிரித்து விடும் என்பதால் தான், சனாதன ஒழிப்பு, திராவிட மாடல் என்றெல்லாம் பிதற்றி வருகிறார்கள் சுயநல அரசியல்வாதிகள்.

Thursday, February 16, 2023

எப்படி வேலை செய்கிறது ChatGPT - பகுதி 1



எப்படி வேலை செய்கிறது ChatGPT - பகுதி 1

ChatGPT இன்று உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இது ஒரு Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) .Google-ம் இதே போன்ற ஒன்றை அடுத்த சில வாரங்களில் வெளியிட உள்ளது.  Chat GPT என்ன செய்யும்?    இது கங்கை போல மிகவும் விசாலமானது, நான் கையில் சிறு துளி எடுத்து பருகி உள்ளேன், அவ்வளவு தான்.  அதில் எனக்கு கொஞ்சம் புரிந்தது, அதை வைத்து எழுதுகிறேன். (நான் Software programmer கூட கிடையாது)

ஏதோ ஒரு விஷயத்திற்கு நூலகத்திற்குள் நுழைகிறோம். சம்பந்தப்பட்ட நூல்கள் என்னென்ன உள்ளன, எங்கே உள்ளன என்று சொல்வது கூகுள்.  அதில் கனமான புத்தகமான Encyclopedia தான் விக்கிபீடியா.  அப்படியானால் ChatGpt ?   எந்த நூலும் வேண்டாம், எந்த தகவல் வேண்டுமானாலும், நாம் புத்தகத்தில் இருந்து விவரம் எடுப்பதற்கு பதில், அந்த லைப்ரரியன் நமக்கு சொல்லிவிட்டால்? அதாவது வாழைப்பழத்தை உரித்து, ஊட்டியும் விட்டால்.  அது தான் ChatGPT

நண்பர்களுடன் சகஜமாக whatsapp-ல் message அனுப்புவது போல கேள்விகள் கேட்கலாம், அது அடுத்த சில நொடிகளில் பதிலும் கொடுக்கிறது. 2021 version என்பதால் அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் பற்றிய விவரம் இல்லை.  சரி, Google கூட இதை செய்யுமே என்று கேட்டால், Chat GPT என்பது ஒரு உரையாடல் போல, நீங்கள் அதனுடன் வாதம் கூட செய்யலாம், அது பதிலும் தரும்.   கபில் தேவ் பற்றி சொல் என்று சொன்னால் சொல்லும், சச்சின் பற்றி சொல் என்றாலும் சொல்லும்.   இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேட்டால், அது Safe -ஆன பதில் தரும், உதாரணமாக இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு சூழலில் விளையாடினார்கள், இருவரில் யார் சிறந்தவர் என்று சொல்ல முடியாது , இருவருமே அவரவர் காலத்தில் Great என்று.




கஜினி முகமதுவை மன்னித்து விட்டது தவறா என்று கேட்டால், அதற்கு கூட இது பெரும்பாலோனோர் ஏற்கும் ஒரு பதிலை கொடுக்கும்.  வரலாறை பொறுத்தவரை தற்போதைக்கு, யாரும் அதனுடன் கா விடாத லெவலில் பதில் தருகிறது.  இதன் algorithm எப்படி செயல்படுகிறது என்று, உருவாக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆனால் என்னை பொறுத்தவரை பல தரவுகளை நொடி பொழுதில் திரட்டி அதன் பிரத்யேக Algorithm உடன் கூட்டணி வைத்து, அது நமக்கு பதில் தருகிறது.

விக்கிபீடியா என்பது யார் வேண்டுமானாலும் திருத்தலாம்,ஆனால் ChatGpt -ல்  நேரடியாக தரவுகளை திருத்த முடியாது. ஆனால் அதுவும் கூட பல இடங்களில் இருந்து தரவுகளை திரட்டுவதால், அதில் நாம் கேள்விகள் கேட்கும் வகையில் கேட்டால், நாம் பெற விரும்பும் வகையில் பதில் பெற முடியும் என்பது என் அனுமானம். உதாரணமாக கபில், சச்சின் யார் சிறந்தவர் என்பதற்கு பதில்,   ஏன் சச்சினை எல்லோரும் great cricketer என அழைக்கிறார்கள் என்று கேட்டால், அது ஒரு பதிலை சொல்லிவிட்டு, இதன் காரணமாக தான் அவர் Great என கருதப்படுகிறார் என்று சொல்லும். 

இப்போது தான் இது அறிமுகம் ஆகியுள்ளது. ஒருவேளை 10000 பேர் சச்சின் ஏன் great என்று கேள்வி கேட்டால்,  5 வருடம் கழித்து, இதனிடம் கபில் - சச்சின் யார் Great என்று கேட்டால்,  அது "இருவரும் வெவ்வேறு காலத்தில் விளையாடினர், ஒப்பீடு கடினம், ஆனால் பலர் சச்சின் தான் great என கருதுகிறார்கள்' என் extra ஒரு வரி சேர்க்க வாய்ப்பு இருக்கிறது.  

சில கேள்விகளுக்கு தவறான பதிலை தருகிறது, நாம் திருத்தினால், உடனே அது 'ஆம் நீங்கள் சொல்வது சரி, என் தவறை திருத்திக் கொண்டேன் என்று சொல்கிறது'.   அதாவது நமது சரியான பதிலை cross-verify செய்து update செய்து கொள்கிறது.




 
நான் சில specific வகையில் கேள்விகள் கேட்டு பதிலும் பெற்று உள்ளேன், அதுவே கூட தவறை திருத்திக் கொண்டு, அடுத்த response-ல்  சரியான விடையை சொல்லியுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் எழுதினால், பதிவு நீண்டதாகி விடும்.  அந்த ஓட்டல் மசால் தோசை சூப்பர் என்று நண்பர் சொன்னால், நமக்கு அது புரியாது, சாப்பிட்டால் மட்டுமே தெரியும். அது போல இதை உபயோகித்தால் மட்டுமே புரியும்.

ஏற்கனவே Information War தான் நடந்துக் கொண்டுள்ளது.  Whatsapp-ல் வருவது எல்லாமே உண்மை, Wikipedia ஒரு ஹரிச்சந்திரன் என்று பெரும் கூட்டமே நம்பிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இந்த ChatGPT எதிர்காலத்தில் பல சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்கும் ஒரு சக்தியாக மாறலாம் 

வாய்ப்பிருந்தால் மேலும் எழுதுகிறேன் 

--
சிவராமகிருஷ்ணன் 



 

Friday, October 7, 2022

ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்களின் விஜயதசமி உரையின் தமிழாக்கம்

 

 

இன்றைய சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய பத்மஸ்ரீ திருமதி சந்தோஷ் யாதவ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் நகர்  சங்கசாலக் மற்றும் ஸஹசங்கசாலக் அவர்களே, ஏனைய சங்க அதிகாரிகளே , பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, அன்பிற்குரிய ஸ்வயம்சேவகர்களே  

 

 

9 நாட்கள் சக்தி தேவியை வழிபட்ட பிறகு, வெற்றியுடன் துவங்கும் சுக்லபட்ச தசமியான விஜயதசமியை கொண்டாட நாம் இங்கு கூடியுள்ளோம். நாம்  மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி அடைய ஆதார சக்தி, ஜகன்மாதா தான் .  எங்கும் தூய்மையும், அமைதியும் நிலவுவதற்கும், மக்களின் மேன்மைக்காகவும்சக்தி எங்கும் வியாபித்திருக்க வேண்டும்.  நமது சிறப்பு விருந்தினராக வந்துள்ள திருமதி சந்தோஷ் யாதவ், அந்த தேவியின் வடிவமாகவும், உணர்வாகவும் இருக்கிறார்.  இரண்டு முறை அவர் கௌரி - சங்கரில் (ஏவரெஸ்ட் சிகரம்) ஏறி சாதனை புரிந்துள்ளார்  

 

 

சங்க நிகழ்ச்சிகளில் சிந்தனையாளர்கள் மற்றும் சாதனை படைத்த பெண்களை சிறப்பு விருந்தினராக அழைக்கும் வழக்கம் பல காலமாக உள்ளது. மனிதர்களை உருவாக்கும் இடமான ஷாகா செயல்முறை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் மற்றும் ராஷ்ட்ரிய சேவிகா சமிதி ஆகியவற்றுக்கு தனித்தனியாக உள்ளன.  மற்ற அனைத்து பணிகளையும் ஆண்களும், பெண்களும் சேர்ந்தே செய்கிறார்கள்.  இந்த பரஸ்பர நிறைவுத்தன்மை பாரத நாட்டு பாரம்பரியத்தில் காணப்படுகிறது.  அந்நிய ஆக்கிரமிப்பு நடைபெற்ற போது, பெண்களை பாதுகாக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த அந்நிய ஆக்கிரமிப்புகள் நீண்ட காலம் தொடர்ந்ததால், அந்த கட்டுப்பாடுகள் நிலைத்து விட்டன .  நம் தேசத்தின் மறுமலர்ச்சியின் போது, நாட்டின் உத்தமர்கள், பெண்கள் மீதான இந்த தவறான கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டனர்பெண்கள் தேவதைகள் என கருதி வைத்து, கோவிலுக்குள் அடைக்கவும் இல்லை அல்லது இரண்டாம் தர மக்களாக கருதி சமையலறைக்குள் வைத்து பூட்டவும் இல்லை.  இன்று அவர்களிடம் விழிப்புணர்வை வலுவாக்கிசமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற, அவர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட்டுஅவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவர்களின் பங்களிப்புடன் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

  

 

நீண்ட காலமாக பல்வேறு சோதனைகளை கடந்து தற்போது தனிமனித மற்றும் பெண்ணிய கண்ணோட்டமும் இந்த திசை நோக்கி திரும்பியுள்ளது. 2017ல் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி வந்த மகளிர் நல ஆர்வலர்கள், இந்தியாவில் உள்ள பெண்களின் நிலை குறித்து மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வு முடிவுகள் அரசு அதிகாரிகளிடமும் சமர்ப்பிக்கப்பட்டது.  பெண்களின் முன்னேற்றம், அவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும்  சமபங்களிப்பின் அவசியத்தை ஆய்வு முடிவுகள் எடுத்துக் கூறின.  இந்த ஆய்வு முடிவுகளில், பெண் சக்தியை விழிப்புணர்வு அடைய செய்து , வலுவாக்கி சம நோக்குடன் பங்கெடுக்க செய்வதன் அவசியம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் குடும்ப அளவில் ஆரம்பித்து, பின்னர் வெவ்வேறு அமைப்புகள் வரை செல்ல வேண்டும், அப்போது தான் சமுதாயம் தனது மாத்ரு சக்தியுடன் (மகளிர் சக்தி) இணைந்து தேசத்தின் மறுமலர்ச்சியில் தனது பங்கை முழுமையாக நிறைவேற்ற முடியும் 

 

 

 

சாதாரண மக்களும்   தேசிய எழுச்சி செயல்முறையை அனுபவித்து வருகின்றனர். வலிமை, நற்பண்புகளை ஏற்படுத்தி , உலகளாவிய அங்கீகாரம் நம் பாரதத்திற்கு கிடைக்கும் பொழுது நமக்கு அளவிலா மகிழ்ச்சி உண்டாகிறது . தற்சார்புக்கு வழிவகுக்கும் கொள்கைகளை அரசாங்கம் தொடர்கிறது. பாரதத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்தஸ்து, நாடுகளின் சமூகத்தில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கோளத்தில், நாம் மேலும் மேலும் தன்னிறைவு அடைந்து வருகிறோம். சீராய்வுக்கு பின், நமது பொருளாதாரம், கொரோனாவுக்கு முந்தைய  நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.கர்தவ்ய பாதைதிறப்பு விழாவில் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பொருளாதார, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன இந்தியாவின் எதிர்காலம் குறித்த விளக்கத்தை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். தெளிவாக எடுத்துரைத்ததற்காக, அரசு பாராட்டுக்குரியது. ஆயினும், இந்த திசையில் நாம் அனைவரும் சொல்லிலும் செயலிலும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். ஆத்மநிர்பர்பாதையில் முன்னேற, ஒரு தேசமாக நம்மை வரையறுக்கும் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் யோசனைகளைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த கோட்பாடுகள் அனைத்தும் அரசு, நிர்வாகம் மற்றும் நமது சமூகத்தால் தெளிவாக உள்வாங்கப்பட்டு சமமாக புரிந்து கொள்ளப்படுவது இன்றியமையாதது ஆகும்.

 

 

காலம் மற்றும் நிலைமைக்கு ஏற்ப சில மாற்றங்கள் கொண்டு வரலாம். அந்த நேரத்தில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒருங்கிணைப்புடன் செய்ய வேண்டும். தெளிவான சிந்தனைஒரே சிந்தனை, உறுதி மற்றும் தவறு நேரும் பட்சத்தில் திருத்திக் கொள்ளும் மனோபாவம் ஆகியவும் முக்கியம்.  அரசும், நிர்வாகமும், பல அரசியல் கட்சி தலைவர்களும, சமுதாயமும், வேறுபாடுகளை கடந்து, ஒன்றாக பணியாற்றினால், தேசம் மிக வேகமாக வளர்ச்சியடையும். அரசு, நிர்வாகம் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் கடமைகளை செய்யும் போது, சமுதாயமும் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும்  

 

 

தேசத்தில் உள்ள ஒவ்வொரு பணியிலும் சமுதாயமும் ஈடுப்பட வேண்டும் என்று சொல்வதுஅரசை அதன் கடமைகளில் இருந்து விடுவிப்பதற்காக அல்ல. மாறாக தேசத்தின் முன்னேற்றத்தில் சமுதாயத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும், அந்த நோக்கில் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதற்காக தான். நம் நாட்டில் மக்கட்தொகை அதிகம், இது உண்மை தான். தற்போது மக்கட்தொகையை பொறுத்தவரை இரு வகையான கண்ணோட்டங்கள் இருக்கின்றன.  மக்கட்தொகை இருந்தால் அதற்கேற்ப வளங்கள் தேவை, அது வளர்ந்துக் கொண்டே போனால் அது பெரிய சுமையாகி விடும், தாங்க முடியாத சுமையாகும். எனவே மக்கட் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. வேறொரு கண்ணோட்டம் என்னவென்றால், மக்கட் தொகை என்பது ஒரு சொத்து.  உரிய பயிற்சிகள் அளித்து சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. உலக மக்கட் தொகையை கவனித்தால் தோன்றும் சிந்தனை,. நம் நாட்டை பார்க்குமிடத்து  அந்த எண்ணம் மாறலாம். சீனா, மக்கட்தொகை கட்டுப்பாடு கொள்கையில் இருந்து பின்வாங்கிமக்கட்தொகை பெருக்கம் என்று மாறிவிட்டது.  தேச நலன் மீதுள்ள ஆர்வம், மக்கட்தொகை குறித்த சிந்தனையை தூண்டுகிறது. 

 

 

 

 

 

இளைஞர்கள் அதிகமுள்ள நாடாக நாம் இருக்கிறோம்.  இன்றில் இருந்து 50 ஆண்டுகள் கழித்து, இன்றைய இளைஞர்கள் மூத்த குடிமக்களானவுடன், அவர்களை கவனிக்க நமக்கு எத்தனை இளைஞர்கள் தேவை என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் முயற்சியினால் குடும்பத்தையும், சமுதாயத்தையும் உயர்த்துகிறார்கள், அதன் மூலம் நாட்டையும் வளமாக்குகிறார்கள். சமுதாய நலன், தேசிய அடையாளம், பாதுகாப்பு, இவற்றோடு வேறு சில அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன.

                                  

இன்று பண்புள்ள சமுதாயம் இருப்பதற்கு காரணம்  வலுவான சமுதாய கட்டமைப்பே. அடுத்த தலைமுறையும் இதே பண்புகளுடன் இருக்க, அதற்கேற்றவாறு வழிகாட்டிகள் போதுமான அளவு இருக்க வேண்டும்.

 

 

குழந்தைகள் எண்ணிக்கை  என்பது தாயின் ஆரோக்கியம், கல்வி, வசதி , தனிநபர் விருப்பம்ஆகியவற்றை பொறுத்து  அமைகிறது. அதே போன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் தேவைகள் இருக்கிறது. மக்கட்தொகை சுற்றுசூழலின் மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது. 

 

இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, மக்கட்தொகை கொள்கையை எடுக்க வேண்டும். இது அனைவருக்கும் பொருந்த வேண்டும். இதை நடைமுறைப்படுத்த, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு திட்டங்கள் தேவை . அப்போது தான் மக்கட்தொகை குறித்த முடிவுகள் உரிய பலனை தரும்.  

 

 

2000ம் ஆண்டில், மத்திய அரசு பல தரப்பினரையும் ஆலோசித்து ஒரு மக்கட்தொகை கொள்கையை வகுத்தது.  நாட்டின் ஒட்டுமொத்த கருவள விகிதத்தை  (Total Fertility Rate) 2.1 அடைவது, இலக்காக தீர்மானிக்கப்பட்டது.  சமீபத்தில் தேசிய குடும்ப நல ஆய்வு முடிவுகள் வெளிவந்தது.  மத்திய மாநில அரசுகளின் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளால், TFR 2.0 எனும் அளவிற்கு வந்துள்ளது.  மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதிலும், மக்கட்தொகை கட்டுப்பாடு இலக்குகளை அடைவதிலும் முன்னேற்றம் அடைந்து வரும் அதே வேளையில், மேலும் 2 கேள்விகள் எழுகின்றன.

 

 

மனநல ஆலோசகர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் கூறும் ஒரு விஷயம், தனிக் குடும்பம் என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  தனிமை, பாதுகாப்பற்ற உணர்வு, பதட்டம் ஆகியவை கடுமையான ஒரு சூழலை உருவாக்குகிறது, குடும்பம் எனும் கட்டமைப்பிற்கு சவால் விடுகிறது என்று கூறுகிறார்கள்.  மற்றொரு விஷயம், சீரற்ற மக்கட்தொகை வளர்ச்சி. 75 ஆண்டுகளுக்கும் முன்னர் நமக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது.  21ம் நூற்றாண்டில் 3 புதிய நாடுகள் உருவாகியுள்ளன, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் மற்றும் கொசோவா.  இந்தோனேசியா, சூடான் மற்றும் செர்பியாவில் ஏற்பட்ட சீரற்ற மக்கட்தொகை காரணமாக ஏற்பட்ட நாடுகள் இவை.  சீரற்ற மக்கட்தொகை வளர்ச்சி காரணமாக புவியியல் எல்லைகள் மாறுகின்றன.  பிறப்பு விகிதம் மட்டுமல்லாது, கட்டாய மதமாற்றம், வஞ்சம், பேராசை ஊடுருவல் ஆகியவையும் முக்கிய காரணம். இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  மக்கட்தொகை கட்டுப்பாடும் மற்றும் மதரீதியான மக்கட்தொகை சமநிலை ஆகியவற்றை நாம் இனியும் புறந்தள்ள முடியாது. 

 

தேசிய புனர்நிர்மாணப் பணியில், நாம் பல தடைகளை கடக்க வேண்டி இருக்கிறதுமுதல் தடையாக இருப்பது பழமைவாதமே. மனிதகுலத்தின் அறிவுத் தளம் காலப்போக்கில் அதிகரிக்கிறது. காலப்போக்கில் சில விஷயங்கள் மாறுகின்றன, சில தவிர்க்கப்படுகின்றன. புதிய உண்மைகளும் சூழ்நிலைகளும் வெளிப்படுகின்றன. எனவே, எந்தவொரு புதிய அரசாங்கமும், பாரம்பரியத்திற்கும் சமகால யதார்த்தங்களுக்கும் இடையில் இணக்கமான சமநிலையை உருவாக்க வேண்டும். காலாவதியான பலவற்றை தூக்கி எறிய வேண்டும்நிகழ்காலம் மற்றும் நமது தேச நலனுடன் ஒத்திசைவான புதிய மரபுகள் உருவாக்கப்பட வேண்டும்அதே நேரத்தில் நமது அடையாளம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைக் கொள்கைகளை ஊக்குவிக்கும் சில அசைக்க முடியாத மதிப்புகள் குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த மதிப்புகள் அழியாவண்ணமும் அதன் மீதுள்ள நம்பிக்கை குலையாவண்ணமும் இருப்பதில் நாம் அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

 

பாரதத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் விரோதமான சக்திகளால் இரண்டாவது வகை தடைகள் உருவாக்கப்படுகின்றன. தவறான கருத்துக்களை பரப்புதல், குற்றச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் ஊக்குவித்தல், பயங்கரவாதம், மோதல்கள் மற்றும் சமூக அமைதியின்மையைத் தூண்டுதல் போன்ற தவறான மற்றும் போலியான செய்திகளை பரப்புவது அவர்களின் உபாயமாக இருக்கிறது. இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். சுதந்திர பாரதத்தில், சுயநலன் மற்றும் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரை பிரித்து ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி அமைதியின்மை மற்றும் பகையை தூண்டி விடுவதை இந்த சக்திகள் செய்து கொண்டிருக்கின்றன

 

அத்தகைய தீய சக்திகளின் மொழி, மதம், மாநிலம், கொள்கை எதுவாக இருப்பினும் அவர்களுடைய சூழ்ச்சி வலையில் சிக்காமல் அவர்களை அச்சமின்றியும் சளைக்காமலும் எதிர்க்க வேண்டும் அல்லது தேவைப்படின் விரட்டி அடிக்க வேண்டும்அத்தகைய சக்திகளைக் கட்டுப்படுத்தவும், முழுமையாக ஒடுக்கவும், அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு நாம் உதவ வேண்டும். நமது சமூகத்தின் வலுவான மற்றும் முன்வினையான ஒத்துழைப்பு மட்டுமே நமது முழுமையான பாதுகாப்பையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த முடியும்.

 

 

சமுதாயத்தின் வலுவான ஈடுபாடு இல்லாமல், எந்த ஒரு உன்னதமான வேலையும் அல்லது மாற்றமும் நிலையானதாகவும் வெற்றிகரமாகவும் இருக்க முடியாது; இது ஒரு உலகளாவிய அனுபவம்.   மக்கள் இதை ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை என்றால் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் செயல்படுத்த முடியாது.

 

 

உலகெங்கிலும், சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்பட்ட பிறகே மகத்தான மற்றும் நிலைத்திருக்கக்கூடிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  அதற்குப் பிறகே அமைப்பு ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனதாய்மொழியில் கற்பதை ஊக்குவிக்கும் கல்வி என்பது ஒரு கொள்கையாக இருக்கவேண்டும் என்பது நியாயமான கருத்துபுதிய கல்விக் கொள்கையின் (NEP) மூலம் அரசு / நிர்வாகம் இதில் கவனம் செலுத்துகிறது. ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை விரும்புகிறார்களா ? அல்லது அதிக அளவில் நிதி ஆதாயம் தரக்கூடிய வழியில் கல்வி அமைத்து ஒரு விதமான குருட்டு ஓட்டப் பந்தயத்திற்காக தங்கள் பிள்ளைகளை தயார் செய்ய நினைக்கிறார்களாஅவ்வாறெனில் அதற்கு கல்வியை விட முக்கியமாக தொழில் முனைப்பு, தைரியம் மற்றும் உள்ளுணர்வு அறிவாற்றல் தேவைதாய்மொழியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது, ​​நம் தாய்மொழியில் பெயர் எழுதி , கையொப்பமிடுகிறோமா இல்லையா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் தாய்மொழியில் உள்ளதாவீட்டு விசேஷங்களுக்கு அச்சிடும் அழைப்பிதழ்களை தாய் மொழியில் அச்சிடுகிறோமா என்றெல்லாம் பார்க்க வேண்டி உள்ளது.

 

 

புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை பண்பட்டவர்களாகவும், தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற வழிவகுக்க வேண்டும், இதுவே அனைவரின் விருப்பம். ஆனால் நன்கு படித்த, அறிவுஜீவி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும்போது கல்வியின் இந்த ஒட்டுமொத்த நோக்கத்தை அறிந்திருக்கிறார்களா?  வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆங்கிலம் தேவை என்ற பெரும்பாலானோரின் எண்ணம் தவறானது 

 

 

வகுப்பறைகளில் மட்டும் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. 'சம்ஸ்காரங்கள்' (உயர் பண்புகள் ) மற்றும் அவர்களின் பெற்றோரின் கடமைகள், சமூக நடத்தைகள் மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் ஊடகங்கள், பொது நபர்கள் மற்றும் தலைவர்கள், பொது நிகழ்ச்சிகள், சமூகக் கூட்டங்கள் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

இதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் இதில் எல்லாம் கவனம் செலுத்தாமல், பள்ளி கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது போதாது.

 

 

வணிக லாப நோக்கத்திற்காக அல்லாமல் மக்களுக்கு பயன் தரும் வகையில் அரசாங்கம் பல்வேறு மருத்துவ முறைகளை ஒருமுகப்படுத்தி ஒரு சீரிய சுகாதார சேவை முறையை உருவாக்க வேண்டும் என்று சங்கம் விரும்புகிறதுஇன்று மருத்துவ கட்டமைப்பில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். ஆனால் நோய்களே நம்ம அண்டாத ரீதியிலான ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும் நாம் கவனம் கொடுக்க வேண்டும்

 

அரசாங்கத்தின் உத்வேகம் மற்றும் ஆதரவுடன், யோகா மற்றும் உடற்பயிற்சி முறைகள், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஆரோக்கியத்தின் நலனுக்காக தொடர வேண்டும். இதில் ஆர்வமுள்ள பலர் உள்ளனர். மேலும் இதுபோன்ற நடைமுறைகளின் நன்மைகளை அவர்கள் தொடர்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் மக்கள் இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தங்கள் பழைய பழக்கவழக்கங்களையும் அணுகுமுறைகளையும் தொடர்ந்தால், எந்த அமைப்பு அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும் ?

 

 

நமது அரசியலமைப்பு சட்டம், அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தை உருவாக்கியது, ஆனால் சமூக சமத்துவம் இல்லாமல், உண்மையான மற்றும் நிலையான மாற்றம் சாத்தியமில்லை என்ற எச்சரிக்கையான ஆலோசனையை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு வழங்கினார்.  பின்னர், இந்த நோக்கத்தை அடைய, சில விதிகள் உருவாக்கப்பட்டன.  ஆனால் நமது மனப்பாங்கு, சமூக ஒற்றுதல் மற்றும் பழக்க முறைகளே இந்த சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்கு காரணம்.  தனிப்பட்ட மற்றும் சமூக நட்புறவு, இயல்பான மற்றும் சாதாரண கருத்து பரிமாற்றங்கள், இணக்கமாக பழகும் தன்மை இவைகளோடு சமுதாய ரீதியில், ஆலயங்கள், நீர்நிலைகள் மற்றும் மயானங்கள் எல்லா ஹிந்துக்களுக்கும் பொதுவாக இல்லாத வரையில் அனைவரும் சரிசமானம் என்பது வெறும் பகற் கனவாகவே இருக்கும்

 

 

நிர்வாக ரீதியில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள், நம் ஒவ்வொருவரின் சமுதாய நோக்கத்திலும் நடத்தையிலும் பிரதிபலித்தால் மட்டுமே அவை பலப்படுத்தப்பட்டு, துரிதப்படுத்தப்பட்டு நிலைத்து இருக்கும்இது நடக்கவில்லை என்றால், மாற்றத்திற்கான வழிமுறை தடைப்பட்டு பலனைப் பெறாதுஎனவே மனப்பாங்கு பயிற்சி இதற்கு முன்னோடியாகும்நுகர்வு மனப்போக்கு மற்றும் சுரண்டல் இல்லாத, நமது சிந்தனை மரபு சார்ந்த வளர்ச்சியை அடைய, நுகர்வு மனப்பான்மையையும், சுரண்டும் போக்கையும் நமது சொந்த வாழ்க்கையிலிருந்தும் நமது சமூகத்திலிருந்தும் ஒழிக்க வேண்டும்.

 

பாரதம் போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு, பொருளாதார மற்றும் வளர்ச்சிக் கொள்கை உருவாக்கம் வேலைவாய்ப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு.  ஆனால் வேலைவாய்ப்பு என்பது சம்பளத்திற்காக பணி செய்வது மட்டும் அல்ல.  இந்த எண்ணம் சமுதாயத்தில் பரவ வேண்டும்.   எந்தப் வேலையும் அற்பமானது என்றோ மதிப்பில்லாதது என்றோ பார்க்கக் கூடாதுஉடல் உழைப்பால் செய்யும் வேலையாக இருக்கட்டும், நிதி பெருக்கத்திற்காக செய்யும் வேலையாக இருக்கட்டும் புத்தி ரீதியாக செய்யும் வேலையாக இருக்கட்டும் - எல்லாம் மதிப்பு மிக்கதே என்று நாம் உணர வேண்டும்தொழில் முனைப்பு ரீதியான வேலைகள் அதிகம் ஊக்குவிக்கப்பட வேண்டும்ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவலாக்கப்பட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டங்களை அமைத்தல், சொந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள், கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கல்வி, சுகாதாரம், சுலப போக்குவரத்து - இவை அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு இருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளாகும்கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதில் ஈடுபட்ட பல தன்னார்வலர்கள், சமுதாயத்தின் ஒன்று பட்ட சக்தி உயர் சேவைகளை வழங்கக்கூடிய சக்தி பெற்றது என்று உணர்ந்தனர்நிதித்துறையில் பணிபுரியும் நிறுவனங்கள், சிறிய அளவிலான நிறுவனங்கள், சில செல்வந்தர்கள், கைவினைத் திறன்களில் வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உள்ளூர் ஸ்வயம்சேவகர்கள் மற்றும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (SJM) இணைந்து 275 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்இது இன்னும் ஆரம்ப நாட்கள் தான் ஆனால் அவர்களால் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கணிசமாக தூண்ட முடிந்தது.

 

ஜனநாயகத்தில், மக்களின்  மனப்பூர்வமான ஒத்துழைப்பின் மதிப்பு நன்கு அறியப்பட்டதாகும். இயற்றப்படும் சட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்வது மற்றும் அதன் நோக்கங்களை அடைவது இதன் காரணமாக மட்டுமே நிகழ்கிறது. விரைவான பலன்களை வழங்கும் அல்லது காலப்போக்கில் ஆதாயங்களை விளைவிக்கும் அல்லது சுயநலத்திற்கு சேவை செய்யும் விதிகள் குறித்து விளக்க வேண்டியதில்லை. ஆனால், தேச நலன் கருதியோ அல்லது நலிந்த பிரிவினரின் நலன்களுக்காகவோ, சுயநலத்தை விட்டுவிட வேண்டும். அப்படிப்பட்ட தியாகங்களைச் செய்வதற்கு மக்களைத் தயார்படுத்தி, விழிப்புணர்வு ஊட்டி பெருமிதம் கொள்ள செய்ய வேண்டும்.

 

 

இந்த சுயத்தன்மை நம் அனைவரையும் இணைக்கிறது. ஏனெனில் இது நமது பண்டைய முன்னோர்கள் பெற்ற சத்திய அனுபவத்தின் நேரடி விளைவு.  

 

டாக்டர் ஜி, திலகர், அரவிந்தர், காந்தி ஆகியோர்   ஆங்கில கல்வி பயின்றவர்களாக இருந்த போதும் சமுதாய சூழ்நிலை அவர்களை தேசபக்தர்களாக தூண்டியது.

 

 

"படைப்பில் நடந்தவை மற்றும் நடக்கவிருக்கும் அனைத்தும் இதிலிருந்து மட்டுமே" (சர்வ யத்பூதம் யச்ச பவ்யம்), அந்த நித்திய மற்றும் நிரந்தரமான வாழ்வின் வெளிப்பாடாகும், அதே நேரத்தில் ஒருவரின் தனித்துவத்தை உறுதியுடன் நிலைநிறுத்துவது, பன்முகத்தன்மை மற்றும் அதன் சிறப்புகளுக்கு மதிப்பளிப்பது - இந்த சிறப்பை பாரதம் மட்டுமே கற்பிக்கிறது. அனைவரும் ஒன்று எனவே அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், நமது பல்வேறு நம்பிக்கைகள் நம்மை பிரிக்காது.உண்மை, கருணை, அகம் மற்றும் புறத்தூய்மை உள்ளம் மற்றும் தவம் ஆகிய நான்கு கொள்கைகள் அனைத்து நம்பிக்கைகளையும் சக பயணிகளாக்கும்.அனைவரையும் பாதுகாக்கிறது. பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் வளர்ச்சியைத் தக்கவைத்து, அவற்றை ஒன்றாக வைத்திருக்கிறது, இதைத்தான் நாம் தர்மம் என்று அழைக்கிறோம், இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நமது கலாச்சாரம் நம் அனைவரையும் இணைத்து, நல்லிணக்கம், உரையாடல், நல்லெண்ணம் மற்றும் அமைதியான கலாச்சாரத்தை ஒரு குடும்பமாக உலகைக் காண தூண்டுகிறது. படைப்பு துவங்கி எல்லா உயிர்களும் மலர்ந்து, வாழ்ந்து ஒன்றுடன் இசைந்து இணைந்து இருத்தல்.'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரே குடும்பம்) மற்றும் "விஸ்வம் பவத்யேகனீடம்" (உலகம் ஒரே வீடாக மாறட்டும்) ஆகிய உணர்வுகள் நம்மை பாடுபடத் தூண்டும் உயரிய இலக்குகள்.

 

 

நமது தேசிய வாழ்வின் இந்த நித்திய ஓட்டம் பழங்காலத்திலிருந்தே இந்த குறிக்கோளுடன் மட்டுமே மற்றும் இந்த வழியில் மட்டுமே தொடர்கிறது. காலம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப, வடிவம், பாதை மற்றும் பாணி மாறிவிட்டது, ஆனால் அடிப்படைகள், இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் அப்படியே உள்ளன. இந்தப் பயணத்தில் தொடர்ச்சியான முன்னேற்றம் நமது எண்ணற்ற துணிச்சல்காரர்களின் அளப்பரிய தைரியத்தாலும், சுய தியாகத்தாலும், எண்ணற்ற கர்மயோகிகளின் மாபெரும் உழைப்பாலும், அறிவாளிகள் மேற்கொண்ட கடுமையான தவத்தாலும் சாத்தியமானது. நாம் அனைவரும் அவற்றை நம் வாழ்வில் பின்பற்றத் தகுதியானவர்கள் என்று கருதுகிறோம். அவர்கள் நமது பெருமை. நமது பொதுவான மூதாதையர்கள் நமது ஒருங்கிணைந்த இருப்புக்கான மற்றொரு அடித்தளம்.

 

 

 

இவர்கள் அனைவரும்  நமது புனித தாய் நாடான பாரதத்தைப் போற்றிப் பாடியுள்ளனர். பழங்காலத்திலிருந்தே, அவர்கள் பன்முகத்தன்மையை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் மனோபாவத்தை நம்மில் புகுத்தினார்கள், அவர்கள் பொருள் இன்பங்களின் அற்பத்தனங்களுக்குள் தங்களை மட்டுப்படுத்தாமல், சுய-உணர்வு உண்மையைத் தேட மனித மனதின் உள்ளார்ந்த இடைவெளிகளில் ஆழ்ந்தனர். உலகம் முழுவதையும் சொந்தக் குடும்பமாகக் கருதி, அறிவு, அறிவியல், கலாச்சாரம், ஆகியவற்றைப் பரப்பினர். இவை அனைத்திற்கும் நமது தாய்நாடான பாரதம் மட்டுமே காரணம். பழங்காலத்திலிருந்தே, ஏராளமான நீரோடைகள், பசுமையான பசுமை மற்றும் அற்புதமான மென்மையான காற்று ஆகியவற்றால் நிறைந்த பாரத மாதா தனது இயற்கையான தட்பவெப்பநிலைகள் மற்றும் எல்லைகள் மூலம் நம்மை வளர்த்து, பாதுகாத்து, நாம் தற்போது சுகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம். பிரிக்கப்படாத நமது தாய்நாட்டின் மீதுள்ள ஈடு இணையற்ற பக்தி நமது தேசியத்தின் முக்கியக் கொள்கையாகும்.

 

 

பழங்காலத்திலிருந்தே, புவியியல், மொழி, மதம், வாழ்க்கை முறை, சமூக மற்றும் அரசியல் அமைப்புகளில் வேறுபாடுகள் இல்லாமல், ஒரு சமூகம், கலாச்சாரம் மற்றும் தேசம் என நமது வாழ்க்கை முறை உடைக்கப்படாமல் தொடர்கிறது. இதில், அனைத்து வேறுபாடுகளையும் ஏற்று, மரியாதை, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுடன் குறுகிய மனப்பான்மை, அடிப்படைவாதம், ஆக்கிரமிப்பு மற்றும் ஈகோ தவிர, யாரும் எதையும் கைவிட வேண்டியதில்லை. உண்மை, இரக்கம், உடல் மற்றும் உள் தூய்மை மற்றும் இந்த மூன்றின் அர்ப்பணிப்பு நடைமுறையைத் தவிர வேறு எதுவும் கட்டாயமில்லை. பாரதத்தின் மீதான பக்தி, நம் முன்னோர்களின் ஒளிமயமான கொள்கைகள் மற்றும் நம் நாட்டின் சனாதன கலாச்சாரம் எனும் மூன்று தூண்களும் நாம் அன்புடனும் பாசத்துடனும் ஒன்றாக பயணிக்க வேண்டிய நமது பாதையை ஒளிரச் செய்து, வழி வகுத்துத் தருகின்றன. இதுவே நமது சுயம் மற்றும் ராஷ்டிர கடமையாகும்  

 

 

 

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) இந்த நோக்கத்துடன் சமூகத்தை அணிதிரட்டி அழைப்பு விடுக்கிறது. இன்றைக்கு சங்கத்தின்  அனுபவமானது, மக்கள் இந்த கூக்குரலைக் கேட்கவும் புரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்பதே. அறியாமை, பொய்மை, பொறாமை, பயம், சுயநலம் போன்றவற்றால் சங்கத்திற்கு எதிராகப் பரப்பப்பட்ட பிரச்சாரம் இப்போது அதன் தாக்கத்தை இழந்துவிட்டது. ஏனென்றால், சங்கத்தின் புவியியல் மற்றும் சமூக வரம்பு கணிசமாக அதிகரித்துள்ளது, அதாவது பலம் அதிகரித்துள்ளது. இவ்வுலகில் உண்மைக்கும் வலிமை தேவை என்பது ஒரு விசித்திரமான உண்மை. இந்த உலகில் தீய சக்திகள் உள்ளன, அவற்றிலிருந்து தன்னையும் பிறரையும் காப்பாற்ற, நல்லொழுக்க சக்திகள் தமக்கென ஒழுங்கமைக்கப்பட்ட வலிமையைக் கொண்டிருக்க வேண்டும். மேற்கூறிய தேசிய சிந்தனையைப் பரப்பி, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக வளர்க்க சங்கம் செயல்படுகிறது. மேற்கூறிய கருத்துக்கள் தேச சிந்தனைகள் என்று அழைக்கப்படுவதால், யாரையும் எதிர்க்காமல், இந்து தர்மம், கலாச்சாரம், சமுதாயம் மற்றும் இந்து ராஷ்டிரத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காகவும் இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கிறது.

 

 

இப்போது சங்கம் மக்களின் பாசத்தையும் நம்பிக்கையையும் பெற்று வலுவாகிவிட்ட நிலையில், இந்து ராஷ்டிரம் என்ற கருத்து தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பலர் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால ஹிந்து' என்ற வார்த்தையை எதிர்க்கின்றனர் மற்றும் அவர்கள் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கருத்தின் தெளிவுக்காக - நாமே ஹிந்து என்ற சொல்லை வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.

 

 

 

சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்களிடையே, இந்துக்களால் அவர்களுக்கு ஆபத்து என்று பொய் பிரச்சாரம்  செய்யப்படுகிறது. இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது. இது சங்கத்தின் அல்லது இந்துக்களின் இயல்பு அல்ல, வரலாறு இதைத் தாங்கி நிற்கிறது. வெறுப்பைப் பரப்புபவர்கள், அநீதி இழைப்பவர்கள், அட்டூழியங்கள் செய்பவர்கள், சமூகத்தின் மீது குரோதம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நம்மைத் தற்காத்துக் கொள்வதும், நம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் அனைவரின் கடமையாகிறது. " மற்றவர்களை அச்சுறுத்துவதில்லை, மற்றவர்களால் அச்சுறுத்தப்படுவதில்லை" இது போன்ற ஒரு இந்து சமுதாயம் தற்போதைய காலத்தின் தேவை. இது யாருக்கும் எதிரானது அல்ல. சகோதரத்துவம், நட்புறவு மற்றும் அமைதியின் பக்கம் நிற்கும் உறுதியான உறுதியை சங்கம் கொண்டுள்ளது.

 

 

இதுபோன்ற சில கவலைகளுடன், சிறுபான்மையினர் என்று சொல்லப்படுபவர்கள் மத்தியில் இருந்து, சில மனிதர்கள் எங்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர், இது தொடரும். பாரதவர்ஷம் ஒரு பண்டைய தேசம், ஒரே தேசம். இந்த அடையாளத்தையும் பாரம்பரியத்தின் ஊற்றுகளையும் பாதுகாத்து, அதே சமயம் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு, ஒருவரோடு ஒருவர் அன்புடனும், மரியாதையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து, நமது தேசத்தின் தன்னலமற்ற சேவையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இன்பத்திலும் துன்பத்திலும் நாம் துணையாக இருக்க வேண்டும், பாரதத்தைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும், பாரதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், இதுவே தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் சங்கப் பார்வை. இதில் சங்கத்தின் வேறு எந்த உள்நோக்கமோ,  வகுக்கப்பட்ட ஆர்வமோ இல்லை.

 

 

சமீபத்தில் உதய்பூர் மற்றும் சில இடங்களில், மிகவும் கொடூரமான மற்றும் கொடுமையான சம்பவங்கள் நடந்தன. நம் சமூகம் திகைத்தது. பெரும்பாலானவர்கள் சோகமாகவும் கோபமாகவும் இருந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இச்சம்பவங்களுக்குக் குறிப்பிட்ட சமூகம் ஒரு மூலகாரணமாக இருக்க முடியாது. உதய்பூர் சம்பவத்திற்குப் பிறகு, முஸ்லீம் சமூகத்தில் இருந்து, சில முக்கிய நபர்கள் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். இத்தகைய எதிர்ப்பு முஸ்லீம் சமூகத்திற்குள் யாரோ ஒரு சிலர் என்று இல்லாமல், ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் இயல்பாக மாற வேண்டும் 

 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்துக்களாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு பொதுவாக இந்து சமூகம் தங்கள் எதிர்ப்புகளையும் வலுவான எதிர்வினைகளையும் உறுதியாக வெளிப்படுத்தியது.

 

 

ஆத்திரமூட்டலின் அளவு எதுவாக இருந்தாலும், எதிர்ப்புகள் எப்போதும், நமது சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் எல்லைக்குள் இருக்க வேண்டும். நமது சமூகம் ஒன்றுபட வேண்டும், பிரிந்து செல்லவோ, சண்டையிடவோ கூடாது. சொல்லிலும், செயலிலும், நடவடிக்கையிலும் பரஸ்பர உணர்வுடன், அனைவரும் கவனத்துடனும் விவேகத்துடனும் பேச வேண்டும். ” “நாம் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் தோற்றமளிக்கிறோம், எனவே நாங்கள் வித்தியாசமாக இருக்கிறோம், நாங்கள் பிரிவினையை விரும்புகிறோம், இந்த நாட்டோடு, அதன் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகள் அல்லது அதன் அடையாளத்துடன் இருக்க முடியாது” - இந்தப் பொய்யின் காரணமாக, ‘சகோதரர்கள் பிரிந்தார்கள், பிரதேசங்கள் இழந்தன, வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன’, - பிரிவினையின் நச்சு அனுபவத்தில் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. நாம் பாரதத்தைச் சேர்ந்தவர்கள், பாரதிய மூதாதையர்களிடமிருந்து வந்தவர்கள் மற்றும் அதன் நித்திய கலாச்சாரம், நாம் ஒரு சமூகமாக ஒன்றாக இருக்கிறோம். இதுவே நம் அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் மற்றும் மந்திரமாகும்.

 

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நமது தேசிய மறுமலர்ச்சியின் தொடக்கத்தில், சுவாமி விவேகானந்தர், “பாரத மாதா மற்றும் தேச சேவையில் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்என்று அறிவுறுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 அன்று நமது முதல் சுதந்திர தினத்தன்று, ரிஷி அரவிந்தர், பாரத நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை வழங்கினார். அந்தச் செய்தி அவரது ஐந்து கனவுகளை விவரித்தது. முதலாவது, பாரதத்தின் சுதந்திரம் மற்றும் ஒற்றுமை. அரசியலமைப்பு செயல்முறை மூலம் சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டது அவருக்கு மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. இருப்பினும், பிரிவினையின் காரணமாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பதிலாக, பாரதம் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் அமைதியை அடைவதற்கு இடையூறாக இருக்கும் ஒரு நிரந்தர அரசியல் பிளவு உருவாக்கப்பட்டுவிட்டதாக அவர் கவலைப்பட்டார். எவ்வகையில் சாத்தியமோ, பாரதத்தின் பிரிவினை ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார், மேலும் அகண்ட பாரதத்திற்காக  வாழ்த்தினார்.

 

 

 

ஆசிய நாடுகளின் விடுதலை, உலகில் ஒற்றுமை, பாரதத்தின் ஆன்மீக ஞானத்தை உலகுக்குப் பரிசளித்தல், மனிதனை உயர்ந்த உணர்வுக்கு பரிணாமம் செய்தல் - தனது மற்ற கனவுகளை நிறைவேற்றுவதில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார்.

 

எனவே, கடமையுணர்வுடன் ஒரு  அறிக்கையை வழங்கினார்:

 

 

"ஒரு தேசத்தின் வரலாற்றில் விதி தனக்கு முன்னால் ஒரு பணியை அமைக்கும் ஒரு காலம் வருகிறது, அதில் ஒரு குறிக்கோள் உள்ளது, அதற்காக எந்த விதமான உன்னதமான விஷயமாக  இருந்தாலும் அல்லது உயர்ந்ததாக இருந்தாலும், எல்லாவற்றையும்  நாம் தியாகம் செய்ய வேண்டும். நம் தாய்நாட்டிற்காக  சேவை செய்வதைத் தவிர வேறு எதுவும் வேறு எதுவும் நமது விருப்பமாக இருக்கக்கூடாது  என்ற நேரம் வந்துவிட்டது. மற்ற அனைவரும் நம் தாய்நாட்டிற்குப் பயன்படும் போது, ​​நீங்கள் படித்தால், தாய்நாட்டிற்காகப் படியுங்கள், தாய்நாட்டிற்குச் சேவை செய்ய உங்கள் உடலையும், மனதையும், ஆன்மாவையும் பயிற்றுவிக்கவும், நம்முடைய தேசத்திற்காக வாழவும் சம்பாதிக்கவும் அயல்நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அறிவைக் கொண்டுவந்து நம் தேசத்திற்குச் சேவை செய்யுங்கள். நம் தேசப் புகழுக்காக உழைக்க வேண்டும். பாரதமாதா மகிழ்ச்சியில் வாழட்டும், அதற்காக நாம் துயரங்களை அனுபவிப்போம். இந்த ஒரு அறிவுரையில் எல்லாம் வந்துவிட்டது."

 

அன்று அவர் சொன்னது, இன்றும் பொருந்துகிறது 

 

கிராமம் தோறும் நல்லோர் சக்தி.

அணு அணுவிலும் பாரத பக்தி.

இதுவே வெற்றியின் மந்திரம்.

திசையெங்கும் பயணம் செய்வோம் 

என் உயர் பாரத நாடு வெல்க 

 

பாரத் மாதா கி ஜெய் ||