Tuesday, August 22, 2017

அம்பானி செய்ததை ஏன் பி.எஸ்.என்.எல். செய்யவில்லை


"1500
ரூபாய் டெபாசிட் பெற்றுக்கொண்டு செல்போன். 100 கோடி செல்போன் கொடுத்தால் எவ்வளவு? இதில் விற்பனையில் வராததால் ஜி.எஸ்.டி. இல்லை. இது 2ஜி யை விட பலமடங்கு ஊழல்."

"இதனால் அம்பானிக்கு பல்லாயிரம் கோடி லாபம், ஏன் இந்த அற்புத திட்டத்தை பி.எஸ்.என்.எல். செய்யவில்லை? இதனால் அரசுக்கு வரவேண்டிய பணம் தனியாருக்கு போகிறது. கார்ப்பரேட் மோடி அரசு இதற்கு உடந்தை."

ஜியோ 1500 ரூபாய் போன் புக்கிங் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்படித்தான் எழுதுகிறார்கள் விவரமறியாத பலர்.

முதல் கணக்கிற்கு வருவோம் 
100 கோடி பேர் செல்போன் வாங்குவார்கள் என்று அம்பானியே நம்பமாட்டார். 1500 ரூபாய்க்கு 12% சதவிகிதம் என்றால் ஒரு அலைபேசிக்கு 180 ரூபாய்.  100 கோடி என்றால் 18000 கோடி ரூபாய் தான் வருகிறது. 2ஜி யை விட அதிக ஊழல் என்பது இங்கே அடிபட்டுபோய்விடுகிறது.

அம்பானியின் இலக்கு 30 கோடி தான்.  சரி அப்படிப்பார்த்தாலும் 5400 கோடி ஊழல் இல்லையா?  இல்லை.  

ஒரு செல்போன் என்று பாப்போம், பின்னர் இறுதியாக 30 கோடியால் பெருக்கிக்கொள்ளலாம். 1500  ரூபாய் செல்போனுக்கு 180 ரூபாய் ஜி.எஸ்.டி.. 

செல்போன் தயாரிக்க பயன்படும் உதிரிபாகங்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி. செலுத்தப்பட்டு இருக்கும், கிட்டத்தட்ட ஒரு 150 ரூபாய் வரை இது இருக்கும். எனவே ஒரு போனுக்கு 30 ரூபாய் அளவிற்கே வரி வருமானம் குறைவு.  

ஒரு நபரின் சராசரி செல்போன் மாத வாடகை இருநூறு. மூன்று வருடத்தில் சுமார்  7200 ரூபாய், அதில் ஜி.எஸ்.டி 18% சதவிகிதம் 1300 ரூபாய் போக மீதி தோராயமாக ஒரு 6000 ரூபாய் அம்பானிக்கு போகும்

இப்பொழுது இதை 30 கோடியால் பெருக்கினால் வரும் தொகை 180000 கோடி.  

அம்பானி இதுவரை முதலீடு செய்துள்ள தொகை சுமார் 2 லட்சம் கோடி.   ஒரு வருடத்திற்கு 30000 கோடி செலவுகள் பிடிக்கும், எனவே மூன்று ஆண்டுகள் முடிவில், ரிலையன்ஸ் சுமார் 2.9 லட்சம் கோடி செலவு செய்திருக்கும், வருமானத்தை கழித்தால் 1 லட்சம் கோடி பின்னடைவு இருக்கும்

இந்த வேகம் மேலும் ஒரு 3 ஆண்டுகள் தொடர்ந்தால் மேலும் பலர் இதில் இணைவார்கள்,  டேட்டா மூலம் இன்னும் சற்று அதிகம் பணம் பெற்றால் 
2023 வாக்கில் லாபம் பார்க்கமுடியும்.  (இதை நான் சொல்லவில்லை, பல நிபுணர்கள் கூறுகிறார்கள்)


சரி இதை ஏன் பி.எஸ்.என்.எல். செய்யவில்லை?


ஜியோவின் இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறுமா

சொல்ல முடியாது. மற்ற நிறுவனங்களும் இதே போல கொண்டுவந்தால், ஜியோ சற்று அடிபடும்
 
ஜியோவிற்கு நஷ்டம் வருமா?
முன்னமே சொன்னது போல யாராவது 1000 ரூபாய்க்கு செல்போன் கொடுத்தால்... ஜியோ கீழேயும் விழலாம்.

பிறகு எந்த தைரியத்தில் அம்பானி செய்கிறார் ?
அவர் பணம் அவர் ரிஸ்க் எடுக்கிறார். அவ்வளவு தான்


ஏன் பி.எஸ்.என்.எல். செய்யவில்லை என்பதற்கு மேலே உள்ள காரணங்களே போதும். அம்பானியின் 2 லட்சம் கோடி காணாமல் போனாலும், அவருக்கு மட்டுமே நஷ்டம், ரிலையன்ஸ் பங்கு வைத்திருப்போருக்கு கொஞ்சம் நஷ்டம் (அவர்கள் ரிஸ்க் தெரிந்தே பங்கு வாங்குகிறார்கள்), மக்களுக்கு ஒரு பைசா நஷ்டம் இல்லை.

ஒரு வேளை பி.எஸ்.என்.எல்.  பணம் போனால், மக்கள் பணம் நஷ்டம். மோடியைத்தான் அனைவரும் கேட்பார்கள். இது தான் விஷயம்.


ஒரு வேளை ரிஸ்க் எடுத்து பி.எஸ்.என்.எல். செய்திருந்தாலும் "நாட்டில் கோடிக்கணக்கானோர் பசியில் உள்ளார்கள், தரமான சாலைகள் இல்லை, பள்ளிக்கூடங்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, இதற்கு பணம் இல்லை ஆனால் செல்போனுக்கு மட்டும் 2 லட்சம் கோடி எப்படி வந்தது" என்று இதே விமர்சகர்கள் மோடியை கேள்வி கேட்டிருப்பார்கள்.

பின்னூட்டு 
10 லட்சம் போன்கள் புக்கிங் ஆனபடியால், முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜியோவால் செய்யமுடியும், அரசு நிறுவனத்தால் இவ்வாறு செய்வது கடினம்