Monday, May 15, 2023

மது ஒழிப்பு : ஆன்மீக மாடலும் - திராவிட மாடலும்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டுமே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகள்.  நன்கு படித்து, பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கே மதுவினால் ஏற்படும் தீமைகள் புரியாத போது, இந்த கிராம மக்களுக்கு சாராயம் குடிப்பதால் வரும் தீமைகள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்த முடியாது  என்று சிலர் பிதற்றுகிறார்கள். டாஸ்மாக்கை ஒழித்து விட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என்றும் சில உளறல்களையும் காண முடிகிறது.   சித்தாமூரை போன்றே இருந்த ஒரு கிராமம், அதுவும் இதே மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமம், இன்று மது அரக்கனை ஒழித்துள்ளது. இதை  சாத்தியமாக்கியது திராவிட மாடல் அல்ல, மாறாக ஆன்மீக மாடல், சனாதன தர்மம் மாடல்.



மதுராந்தகம் அருகே நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் எனும் ஆசிரமம் மற்றும் பாரத மாதா கோவில் எழுப்பியுள்ளார் சுவாமி பிரம்ம யோகானந்தா ஸ்வாமிகள். ஆன்மீகத்தின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு சமூக மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் இவர்.  இதற்கு ஒரு உதாரணம், நீலமங்கலம் அருகே உள்ள திருக்குன்னத்தூர் கிராமம். சுற்றுவட்டார கிராமம் போல இதுவம் சமூக மதுரம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தது. அந்த மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தினார் சுவாமிகள்.  அந்த கிராமத்தில் ஸ்ரீ மஹா நாராயண ஸ்வாமி கோவில் கட்டினார் மற்றும் முத்து மாரியம்மன் கோவிலை புனர் நிர்மாணம் செய்தார். அங்கு வசித்த பட்டியல் சமுக மக்களுக்கு ஆன்மீக நெறிகளை போதித்தார்.  





கோவில் கட்டுமானம் துவங்கியதில் இருந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அந்த ஊர் மக்கள் அசைவம் சாப்பிடுவது  மற்றும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தனர். கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.  பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை நோக்கி அந்த கிராமம் பயணித்து வருகிறது   இதை ஆன்மீகத்தின் மூலம் சாதித்து காட்டினார் சுவாமிஜி. 





அம்மன் கோவில்கள், முருகன் கோவில்கள், சபரிமலை விரதம் இருந்த பிறகு குடிப்பழக்கத்தை விட்டவர்கள் பல ஆயிரக்கணக்கான பேர்.  ஆன்மீகத்தின் மூலம் எதுவும் சாத்தியம். இது தான் சனாதன தர்மத்தின் பெருமை.  மக்களுக்கு ஆன்மீக அறிவு வந்துவிட்டால் அவர்களின் சிந்தனை மற்றும் செயலில் தெளிவு வந்து விடும். அந்த தெளிவு வந்துவிட்டால், தங்கள் பிழைப்பு சிரித்து விடும் என்பதால் தான், சனாதன ஒழிப்பு, திராவிட மாடல் என்றெல்லாம் பிதற்றி வருகிறார்கள் சுயநல அரசியல்வாதிகள்.

Thursday, February 16, 2023

எப்படி வேலை செய்கிறது ChatGPT - பகுதி 1



எப்படி வேலை செய்கிறது ChatGPT - பகுதி 1

ChatGPT இன்று உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இது ஒரு Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) .Google-ம் இதே போன்ற ஒன்றை அடுத்த சில வாரங்களில் வெளியிட உள்ளது.  Chat GPT என்ன செய்யும்?    இது கங்கை போல மிகவும் விசாலமானது, நான் கையில் சிறு துளி எடுத்து பருகி உள்ளேன், அவ்வளவு தான்.  அதில் எனக்கு கொஞ்சம் புரிந்தது, அதை வைத்து எழுதுகிறேன். (நான் Software programmer கூட கிடையாது)

ஏதோ ஒரு விஷயத்திற்கு நூலகத்திற்குள் நுழைகிறோம். சம்பந்தப்பட்ட நூல்கள் என்னென்ன உள்ளன, எங்கே உள்ளன என்று சொல்வது கூகுள்.  அதில் கனமான புத்தகமான Encyclopedia தான் விக்கிபீடியா.  அப்படியானால் ChatGpt ?   எந்த நூலும் வேண்டாம், எந்த தகவல் வேண்டுமானாலும், நாம் புத்தகத்தில் இருந்து விவரம் எடுப்பதற்கு பதில், அந்த லைப்ரரியன் நமக்கு சொல்லிவிட்டால்? அதாவது வாழைப்பழத்தை உரித்து, ஊட்டியும் விட்டால்.  அது தான் ChatGPT

நண்பர்களுடன் சகஜமாக whatsapp-ல் message அனுப்புவது போல கேள்விகள் கேட்கலாம், அது அடுத்த சில நொடிகளில் பதிலும் கொடுக்கிறது. 2021 version என்பதால் அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் பற்றிய விவரம் இல்லை.  சரி, Google கூட இதை செய்யுமே என்று கேட்டால், Chat GPT என்பது ஒரு உரையாடல் போல, நீங்கள் அதனுடன் வாதம் கூட செய்யலாம், அது பதிலும் தரும்.   கபில் தேவ் பற்றி சொல் என்று சொன்னால் சொல்லும், சச்சின் பற்றி சொல் என்றாலும் சொல்லும்.   இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேட்டால், அது Safe -ஆன பதில் தரும், உதாரணமாக இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு சூழலில் விளையாடினார்கள், இருவரில் யார் சிறந்தவர் என்று சொல்ல முடியாது , இருவருமே அவரவர் காலத்தில் Great என்று.




கஜினி முகமதுவை மன்னித்து விட்டது தவறா என்று கேட்டால், அதற்கு கூட இது பெரும்பாலோனோர் ஏற்கும் ஒரு பதிலை கொடுக்கும்.  வரலாறை பொறுத்தவரை தற்போதைக்கு, யாரும் அதனுடன் கா விடாத லெவலில் பதில் தருகிறது.  இதன் algorithm எப்படி செயல்படுகிறது என்று, உருவாக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆனால் என்னை பொறுத்தவரை பல தரவுகளை நொடி பொழுதில் திரட்டி அதன் பிரத்யேக Algorithm உடன் கூட்டணி வைத்து, அது நமக்கு பதில் தருகிறது.

விக்கிபீடியா என்பது யார் வேண்டுமானாலும் திருத்தலாம்,ஆனால் ChatGpt -ல்  நேரடியாக தரவுகளை திருத்த முடியாது. ஆனால் அதுவும் கூட பல இடங்களில் இருந்து தரவுகளை திரட்டுவதால், அதில் நாம் கேள்விகள் கேட்கும் வகையில் கேட்டால், நாம் பெற விரும்பும் வகையில் பதில் பெற முடியும் என்பது என் அனுமானம். உதாரணமாக கபில், சச்சின் யார் சிறந்தவர் என்பதற்கு பதில்,   ஏன் சச்சினை எல்லோரும் great cricketer என அழைக்கிறார்கள் என்று கேட்டால், அது ஒரு பதிலை சொல்லிவிட்டு, இதன் காரணமாக தான் அவர் Great என கருதப்படுகிறார் என்று சொல்லும். 

இப்போது தான் இது அறிமுகம் ஆகியுள்ளது. ஒருவேளை 10000 பேர் சச்சின் ஏன் great என்று கேள்வி கேட்டால்,  5 வருடம் கழித்து, இதனிடம் கபில் - சச்சின் யார் Great என்று கேட்டால்,  அது "இருவரும் வெவ்வேறு காலத்தில் விளையாடினர், ஒப்பீடு கடினம், ஆனால் பலர் சச்சின் தான் great என கருதுகிறார்கள்' என் extra ஒரு வரி சேர்க்க வாய்ப்பு இருக்கிறது.  

சில கேள்விகளுக்கு தவறான பதிலை தருகிறது, நாம் திருத்தினால், உடனே அது 'ஆம் நீங்கள் சொல்வது சரி, என் தவறை திருத்திக் கொண்டேன் என்று சொல்கிறது'.   அதாவது நமது சரியான பதிலை cross-verify செய்து update செய்து கொள்கிறது.




 
நான் சில specific வகையில் கேள்விகள் கேட்டு பதிலும் பெற்று உள்ளேன், அதுவே கூட தவறை திருத்திக் கொண்டு, அடுத்த response-ல்  சரியான விடையை சொல்லியுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் எழுதினால், பதிவு நீண்டதாகி விடும்.  அந்த ஓட்டல் மசால் தோசை சூப்பர் என்று நண்பர் சொன்னால், நமக்கு அது புரியாது, சாப்பிட்டால் மட்டுமே தெரியும். அது போல இதை உபயோகித்தால் மட்டுமே புரியும்.

ஏற்கனவே Information War தான் நடந்துக் கொண்டுள்ளது.  Whatsapp-ல் வருவது எல்லாமே உண்மை, Wikipedia ஒரு ஹரிச்சந்திரன் என்று பெரும் கூட்டமே நம்பிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இந்த ChatGPT எதிர்காலத்தில் பல சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்கும் ஒரு சக்தியாக மாறலாம் 

வாய்ப்பிருந்தால் மேலும் எழுதுகிறேன் 

--
சிவராமகிருஷ்ணன்