Monday, May 15, 2023

மது ஒழிப்பு : ஆன்மீக மாடலும் - திராவிட மாடலும்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டுமே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகள்.  நன்கு படித்து, பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கே மதுவினால் ஏற்படும் தீமைகள் புரியாத போது, இந்த கிராம மக்களுக்கு சாராயம் குடிப்பதால் வரும் தீமைகள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்த முடியாது  என்று சிலர் பிதற்றுகிறார்கள். டாஸ்மாக்கை ஒழித்து விட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என்றும் சில உளறல்களையும் காண முடிகிறது.   சித்தாமூரை போன்றே இருந்த ஒரு கிராமம், அதுவும் இதே மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமம், இன்று மது அரக்கனை ஒழித்துள்ளது. இதை  சாத்தியமாக்கியது திராவிட மாடல் அல்ல, மாறாக ஆன்மீக மாடல், சனாதன தர்மம் மாடல்.



மதுராந்தகம் அருகே நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் எனும் ஆசிரமம் மற்றும் பாரத மாதா கோவில் எழுப்பியுள்ளார் சுவாமி பிரம்ம யோகானந்தா ஸ்வாமிகள். ஆன்மீகத்தின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு சமூக மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் இவர்.  இதற்கு ஒரு உதாரணம், நீலமங்கலம் அருகே உள்ள திருக்குன்னத்தூர் கிராமம். சுற்றுவட்டார கிராமம் போல இதுவம் சமூக மதுரம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தது. அந்த மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தினார் சுவாமிகள்.  அந்த கிராமத்தில் ஸ்ரீ மஹா நாராயண ஸ்வாமி கோவில் கட்டினார் மற்றும் முத்து மாரியம்மன் கோவிலை புனர் நிர்மாணம் செய்தார். அங்கு வசித்த பட்டியல் சமுக மக்களுக்கு ஆன்மீக நெறிகளை போதித்தார்.  





கோவில் கட்டுமானம் துவங்கியதில் இருந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அந்த ஊர் மக்கள் அசைவம் சாப்பிடுவது  மற்றும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தனர். கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.  பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை நோக்கி அந்த கிராமம் பயணித்து வருகிறது   இதை ஆன்மீகத்தின் மூலம் சாதித்து காட்டினார் சுவாமிஜி. 





அம்மன் கோவில்கள், முருகன் கோவில்கள், சபரிமலை விரதம் இருந்த பிறகு குடிப்பழக்கத்தை விட்டவர்கள் பல ஆயிரக்கணக்கான பேர்.  ஆன்மீகத்தின் மூலம் எதுவும் சாத்தியம். இது தான் சனாதன தர்மத்தின் பெருமை.  மக்களுக்கு ஆன்மீக அறிவு வந்துவிட்டால் அவர்களின் சிந்தனை மற்றும் செயலில் தெளிவு வந்து விடும். அந்த தெளிவு வந்துவிட்டால், தங்கள் பிழைப்பு சிரித்து விடும் என்பதால் தான், சனாதன ஒழிப்பு, திராவிட மாடல் என்றெல்லாம் பிதற்றி வருகிறார்கள் சுயநல அரசியல்வாதிகள்.