
ஆனால் திருவள்ளுவர் பிறந்த நாள் விஷயத்தில் நடந்த குளறுபடி தெரியுமா?
திருவள்ளுவர் பிறந்தது வைகாசி மாதம் அனுஷம் நக்ஷத்திரத்தில் தான். இன்றும் பலர் இந்த தினத்தில் தான் அவர் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்கள்.
1971 வரை தமிழ்நாட்டிலும் அவ்வாறே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் அந்த ஆண்டு, அப்பொழுதைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி, தை 2 தான் வள்ளுவர் பிறந்தநாள் என்று அறிவித்தார்.
கருணாநிதி ஏன் மாற்றினார்?
திமுக நண்பர்களுக்கு இந்த உண்மை கசக்கும், ஆனால் உண்மை காரணம் இதோ உங்கள் முன்னே. திமுக வில் உள்ள தொண்டர்கள் பலர் நாத்திகர்கள் இல்லை, தொண்டர்களிடத்தில் ஹிந்து விரோத சிந்தனை இல்லை, பலர் கோவில்களுக்கு செல்கிறார்கள், விபூதி, குங்குமம் தரிக்கிறார்கள். கோவில் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேவை செய்கிறார்கள்.
ஆனால் அக்கட்சியின் தலைமை அப்படி இல்லை. இன்றைக்கு இருக்கும் ஹிந்து விரோத சிந்தனை, பிரமாண எதிர்ப்பு 50 ஆண்டுகள் முன்பு கடுமையாக இருந்தது. ஸ்ரீரங்கம் கோவிலை பீரங்கி வைத்து பிளப்பேன் என்று சொன்னது முதல் விநாயகர் விக்கிரகங்களை தூக்கிபோட்டு உடைத்தது வரை அனைத்தையும் செய்தவர்கள் தி.க மற்றும் திமுக தலைமை.
சரி, இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே, வள்ளுவர் விஷயத்திற்கு வருவோம். மேலே சொன்ன காரணங்களால் ஹிந்து சமயத்தை ஒட்டி வாழ்ந்த திருவள்ளுவரை அப்படியே எப்படி ஏற்றுக்கொள்வது என்று முதலில் சிந்தித்தார்கள். பட்டை, ருத்திராட்ச கொட்டை, பூணூல் இவ்வாறுதான் வள்ளுவர் மக்கள் மனதில் உருவகம் பெற்றிருந்தார். இவர்களுக்கு பட்டையும் ஆகாது, பூணூலும் ஆகாது, எனவே அதிகாரபூர்வ படம் என்று ஒன்று வரைந்து, வள்ளுவரை பாழ்நெற்றியுடன் காண்பித்தனர். பூணூல் பிரச்சனை அடுத்து வந்தது. சரி மேலே துண்டை போட்டு சமாளிப்போம் என்று முடிவெடுத்தார்கள். ருத்திராட்சத்தை எடுத்துவிட்டார்கள். வள்ளுவருக்கு அவர்கள் செய்த முதல் துரோகம்.
(உடனே வள்ளுவர் பார்ப்பானா இல்லையா என்றெல்லாம் பேச வேண்டாம். 700 ஆண்டுகள் முன்பு வரை அனைவருமே பூணூல் போட்டிருந்தார்கள், இன்றைக்கும் யார் வேண்டுமானலும் போட்டு கொள்ளலாம், சாதியெல்லாம் கிடையாது. இது எப்போது சாதி அடையாளாமானது என்று வேறொரு பதிவில் பார்க்கலாம்).
பிறந்தநாளை மாற்றியது ஏன்?
வைகாசி மாதம் மே 16 முதல் ஜூன் 15 வரை. இந்த மாதத்தில் அனுஷம் வரும் தினமே வள்ளுவர் தினம். 1971ல் அனுஷ நக்ஷத்திரம் ஜூன் 7 அன்று வந்தது, அன்றைய தினமே கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு 4 நாட்கள் முன்பு, தானே தலைவருக்கு பிறந்தநாள்.
இந்த வருஷம் ஓகே, அடுத்த வருஷம் அனுஷம் ஜூன் 3 வந்துட்டா, நம்மள மறந்துடுவாங்களே, என்ன பண்றது அப்படினு யோசித்தார்.
தமிழுக்கு பிறந்த நாள், வள்ளுவரே, தமிழே இப்படியெல்லாம் கட்சிக்காரங்க போஸ்டர் அடிச்சு, மக்கள் திருவள்ளுவரை சொல்றாங்க போல அப்படினு நினைத்து விட்டால்.
தனக்கு விழா எடுப்பதற்கு பதில், தமிழ் சமூகம் திருவள்ளுவருக்கு விழா எடுத்தால், தனது நிலை என்ன ஆவது என்று ரூம் போட்டு யோசிச்சு சொன்னார் " உடனே "1920ல் மறைமலை அடிகள் கூட்டிய கூட்டத்தில் வள்ளுவர்பிறந்தநாள் தை 2 அப்படினு தீர்மானம் போட்டாங்க. எனவே இனி தை 2 தான் வள்ளுவர் பிறந்தநாள்" என்று.
அவர் சொன்ன காரணம்
வள்ளுவர் பிறந்த நாளை மாற்றியதற்கு நியாயம் கற்பிக்க வேண்டி "1920ல் மறைமலை அடிகள் நடத்திய மாநாட்டில் வள்ளுவர் பிறந்த தினம் தை 2 என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்" என்று சொன்னார்.
மறைமலையடிகள் மாநாடு நடந்தது மட்டுமே உண்மை. அதில் வள்ளுவர் பிறந்த நாள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. தமிழ் ஆராய்ச்சியாளர் திரு. சண்முகம் தனது கட்டுரையில் இது பற்றி தெரிவித்துள்ளார். தமிழ் பேராசிரியர் அன்பழகன் (திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லை) இதே கருத்தை சொல்லியுள்ளார்.
இவரது இந்த செயலுக்கு அன்றே தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நடந்தது.
பதிவு நாள் : 14.01.2018
பதிவு நாள் : 14.01.2018
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பின்னூட்டு
இந்த வலைப்பதிவை படித்த எனது நண்பர் சத்தியன், " மறைமலையடிகள் மாநாட்டில் வள்ளுவர் பிறந்த தினம் தை 2 என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அவ்வாறு தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, எந்த மறைமலையடிகளை கருணாநிதி மேற்கோள்காட்டினாரோ, அந்த மறைமலையடிகள் வைகாசி அனுஷம் தான் வள்ளுவர் பிறந்த நாள் என்று சொல்லியுள்ளார்" என கூறினார்.பதிவு நாள் : 15.01.2018
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இது தொடர்பாக உபயோகமுள்ள இன்னொரு லிங்க் என் பார்வையில் பட்டது
https://groups.google.com/forum/#!topic/mintamil/V51MS8ldMBI
பதிவு நாள் : 15.01.2018
No comments:
Post a Comment