10 வருடம் வீட்டில் உட்கார்ந்து இருந்தவர் மோடி அலையில் பிழைத்து முதல்வரானார். இவருக்கும் ஜெகன் கட்சிக்கும் இடையே இருந்த வாக்கு சதவிகிதம் மிக குறைவே.
இவர் மீதுள்ள இரண்டு ஊழல் புகார்கள் கழுத்தை நெறிக்குமளவிற்கு வரும் சூழலில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள, பாஜக அணியை விட்டு வெளியேறியுள்ளார். மாநில நலன் என்று சப்பைக்கட்டு சொல்கிறார்.
முதல் ஊழல்
ஆந்திரா முழுவதும்.வீடுகளுக்கு கேபிள் டீவி மற்றும் இன்டர்நெட் தரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்கு பெயர் Teraband . இதில் ஒரு சர்ச்சை உண்டு. நாம் என்ன டீவி பார்க்க வேண்டும், எந்த இணையதளத்தை பார்க்க வேண்டும் என்று அரசு தீர்மானிக்க முடியும். உதாரணமாக திமுக, இது போன்ற ஒரு விஷயத்தை சன் டிவிக்கு கொடுத்துவிட்டால், அவர்கள் சன் டீவி, கலைஞர் டீவி தவிர்த்த தொலைக்காட்சிகளை block செய்யமுடியுமல்லவா, அதே போல. தனது கட்சிக்கு எதிரான இணையதளங்களை முடக்கவும் முடியும். (ஆனால் இத்திட்டம் படு தோல்வி. மொத்தமே 1 லட்சம் பேர் மட்டுமே மாநிலம் முழுவதிலுமிருந்து இணைந்துள்ளார்கள்). பிரச்சனை இதுவல்ல. இதில் உள்ள ஊழல்.
இதற்கான உரிமத்தை Teranet என்கிற நிறுவனம் 380 கோடிக்கு பெற்றது. பிற நிறுவனங்கள் இதைவிட குறைவான தொகை சொல்லியும், Teranet க்கு அளிக்கபப்ட்டது. இதன் இயக்குனர்கள், நாயுடுவின் ஹெரிடேஜ் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். அனைவருமே நாயுடுவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.
காங்கிரஸ் மற்றும் ஜெகன் கட்சிகள், 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சனை கிளப்ப, விசாரணை நடைபெற்று வருகிறது. எந்நேரமும் ரெய்டு நடக்கலாம். தனது செல்வாக்கால் விசாரணையை நிறுத்த முயன்று தோற்றுப்போனார் சந்திரபாபு நாயுடு.
அமராவதி நில ஊழல்
இது மிகப்பெரிய ஊழல். எந்த இடத்தை தலைநகராக தேர்வு செய்வது என்று அறிவிக்கப்படாத நிலையில், நாயுடுவின் உறவினர்கள், அமைச்சர்கள் அமராவதிக்கு சுற்றுப்புறங்களில் சல்லிகாசுக்கு ஏக்கர் கணக்கில், விவசாயிகளை ஏமாற்றி மனைகளை வாங்கி போட்டனர். பின்னர் அமராவதி தலைநகர் என்று அறிவிக்கப்பட்டதும் இந்த நிலங்களின் விலை 20 முதல் 50 மடங்கு வரை உயர்ந்தது.
நமக்கு புரியும்வகையில் சொல்வதானால், சென்னை விவசாய கிராமம். திருச்சி, மதுரை, சென்னை, நெல்லை, கோவை இவைகளில் எதை தலைநகராக்குவது என்று ஆய்வுகள் நடக்கிறது. சென்னையில் ஒரு ஏக்கர் 1 லட்சம். தாம்பரத்தில் 50000 என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது தாம்பரத்தில் நான் 100 ஏக்கர் வாங்க 50 லட்சம் ஆகும். நாளை சென்னை தலைநகர் என்று தீர்மானமானால், ஒரு ஏக்கர் 20 லட்சமாகிறது. நான்கே வருடத்தில் எனது சொத்து மதிப்பு 20 கோடி.
அதுமட்டுமில்லாமல் சென்னையிலேயே விவசாயிகள் கைவசம் வைத்துள்ள இடங்கள் தொழிற்சாலைக்கு என்றும், அரசு திட்டங்களுக்கு என்றும் (அதாவது சுலபமாக அரசு சுலபமாக எடுத்துக்கொள்ளலாம்), அமைச்சர்கள் வாங்கிய சொத்துக்கள் வணிக வசதிகளுக்கென்றும் பிரிக்கப்படுகிறது. (வீடு, காலேஜ், தியேட்டர்). எனவே இவைகளை அரசு எடுத்துக்கொள்ளாது, மாறாக அவர்கள் அதிக விலைக்கு விற்றுக்கொள்ள முடியும். இது போல பல ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வளைக்கப்பட்டுள்ளன.
இது சென்ற வருடம் பெரிய புயலை கிளப்பியது. ஜெகன் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்த ஊழலை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இவ்வருட இறுதியில் தொடர் போராட்டங்கள் செய்து ஆட்சியை முடக்க முயற்சி செய்தனர்.
இந்த இரண்டு நெருக்கடிகள் போதாது என்று, விவசாய சங்கங்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்ற முறை எப்படி விவசாயிகளை கை விட்டாரோ இம்முறையும் அதுவே நிலை. இன்றைக்கு தேர்தல் நடந்தால் நாயுடு மண்ணை கவ்வுவது உறுதி.
இப்படி பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ள அவர் செய்த விஷயம், மத்திய அரசிலிருந்து விலகுவது, மோடியை எதிர்ப்பது.
மோடியை எதிர்ப்பதால் அவருக்கு மூன்று லாபம்
1. காங் இவரை இனி திட்டாது, என்ன செய்தாலும் ஜால்ரா போடும். நில ஊழல் பற்றி கப்சிப்
2. கேபிள் டீவி ஊழலில் இவர் மீது ரெய்டு நடந்தால் 'பழிவாங்கும் நடவடிக்கை' என்று சொல்லி விடலாம்.
3. விவசாயிகள் இனி இவரை காரணமே இல்லாமல் கொண்டாடுவார்கள். அடுத்த தேர்தலிலும் ஒட்டு போடுவார்கள்.
இப்படி ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் அடிக்க முயற்சிக்கிறார் சந்திரபாபு நாயுடு
ஆதாரம்