முருகன் பிறந்த நாள் வைகாசி விசாகம் வரும் திங்கட்க்கிழமை - 28.05.2018.
அதற்கு அடுத்த நாள் வைகாசி அனுஷம் (29.05.2018). அது திருவள்ளுவரின் பிறந்தநாளாகும். பலருக்கும் இது புதிய தகவலாக இருக்கலாம், ஏதோ நான் தவறாக கூறுவதாக நினைக்கலாம். ஆனால் அதுவே உண்மை.
1971ம் ஆண்டு வரை வைகாசி அனுஷம் அன்றே திருவள்ளுவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்தது. எவ்வித காரணமுமின்றி தை 1 தான் வள்ளுவர் பிறந்த நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் தை 1 இல்லை தை 2 வள்ளுவர் பிறந்தநாள் என்றும் மாற்றப்பட்டது.
இன்றைக்கும் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில், சென்னைத் திருவள்ளுவர் மன்றம், தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைகாசி அனுஷம் அன்றே, வள்ளுவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது.
வள்ளுவரின் பிறந்தநாள் தை 2 என்று வாதிடுபவர்கள் மிகவும் பின்னோக்கி எல்லாம் செல்ல வேண்டாம், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை தெரிந்துக்கொண்டாலே போதும்.
1935 மே மாதம்18 ஆம் நாள், அனுஷநட்சத்திர நாள். அன்றைய தினம்
திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலை அடைந்துதிருவள்ளுவர் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.அன்றைய தினம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மறைமலை அடிகள், கா. நமச்சிவாய முதலியார், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், T.செங்கல்வராயன் உள்ளிட்ட பல அறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.
அடுத்த ஆண்டு வைகாசி அனுஷம் அன்று நடைபெற்ற வள்ளுவர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தலைமயேற்றவர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். சுவாமி சித்பவானந்தா,கி.வா. ஜகந்நாதன், அமரர் கல்கி உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களும் வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் முன்னாள் முதல்வர் அண்ணா, பெரியார் ஆகியோரும் கூட வைகாசி அனுஷம் வள்ளுவர் பிறந்த தினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கூட 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
No comments:
Post a Comment