Sunday, January 29, 2017

Has Jallikattu ordinance opened a pandora box?

Much has been written about Jallikattu protests. This write up is about the legal challenges the ordinance can throw up in future for Govts.. I m not talking about challenges for this ordinance, but for other issues.

Both the Central,State Govt succumbed to the pressure and an ordinance was passed. My view is that, both the State and Central Govt have dragged their feet for so long on Jallikattu issue and created a mess. With the crowds swelling as the day progresses, the ordinance was enacted due to TINA factor alone. There is no able leader is Tamil Nadu who could have just assured the crowd and explained them the legalities. Now by passing the SC, Govt. has opened a can of worms.
The Hon'ble Chief Justice of Madras HC Shri. Sanjay Kishan Kaul, on his RDay speech said that "At times,courts in order to hold the law, pass orders that are against sentiments of majority". Another notable judge once said 'The orders of the courts are not always correct, but one has no option except following it'.  This applies to courts across the world.

Who has greater power? Is it the Parliament which enacts law or the court? This is like which came first, is it the egg or chick? But since courts are there, some sanity prevails. The Jallikattu case is being heared by the SC and the Govt should have fastened it much earlier. After having allowed it to drag, they brought ordinance just to quell the protest.

Now my question, is the ordinance right thing to do? Gujarat witnessed even bigger agitation by Patels. Gujjars and Jats took to streets in Rajasthan and Haryana respectively. Stirs always happens in democratic country like India, but if people start asking for ordinance for every issue, then it becomes too big a mess to clear. There is every chance of people demanding ordinance for everything. Fortunately in TN, the entire State was in Unison for Jallikattu, so it became easy, but other issues are not like that.

Forget the reservation issue. What if people demand ordinance for bringing in Uniform Civil Code or on Ram Janmabhoomi issue? Either way the cabinet decides, there will be riot across the country. In river disputes, if every state refuse to obey SC and pass their own ordinance, what happens?

Agreed, there are flaws in our Judicial systems, but our country is by and large peaceful (barring J&K and some sectors in NE). Even if a person feels that he has been wronged by a court,he may get consolation as the time goes by. On other hand, if he feels he is wronged by the Govt., it might tend him to go rogue.

Hence my personal opinion is that people should not get swayed by sentiments in pressing issues, but must apply their mind and then act

-- Satyajith
Tags: 
Jallikattu, Ordinance, Jat, Patel, Patidars, Gujjar, Ayodhya, Ram Janma Bhoomi, Reservation

Image courtesy: Backyardchickens.com



Saturday, January 28, 2017

Govt Might Soon Be at Your Doorstep Conducting Free Tests for Cancer & Diabetes

On World Cancer Day 4th Feb 2017, the government of India will be flagging off a new initiative where officials and members of the medical community will be going door to door to many homes in the country and conducting free cancer screenings.
The initiative will also come with free tests to check if those who live in those homes have diabetes or not. The program will be kick-started on February 4 by Prime Minister Narendra Modi. The government is initiating the program on a massive scale and wants to cover a third of India’s population by the end of 2017.
Speaking to the Times of India,  an official said, “We are aiming to cover 200 districts across the country by 2018. At a later stage, we will also add testing for asthma under the program.”
In time, the government will be adding more screenings and tests, including for asthma. The centre will be training doctors, nurses and  medical professionals to help conduct these tests correctly and will also be outfitting them with the required equipment. They will also be given resources to set up testing camps in various districts across the country in order to collect samples.
-- Satyajith
Source: www.thebetterindia.com

அடுத்த அரவிந்த் கேஜ்ரிவாலாகிறாரா சகாயம் IAS?

மதுரை கிரானைட் வழக்கை விசாரித்ததன் மூலம், தான் ஒரு நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருக்கிறார் திரு. சகாயம் IAS அவர்கள்.

2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அவரை முதல்வர் வேட்பாளராக சில இளைஞர்கள் அறிவித்தனர், ஆனால் அந்த சமயம், அதை திரு.  சகாயம், ஏற்றுக்கொள்ளவில்லை. 

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, அதிமுக பலம் குன்றி இருப்பது உண்மையே. பொதுச்செயலாளர், முதல்வர் என்று 2   அதிகார மையங்கள் உள்ளன. மேலும் தீபா என்று ஒருவரும் சில நிர்வாகிகளை இழுத்து வருகிறார்.

இழந்ததை பிடிக்க திமுகவும் போராடிவரும் நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது.  அறப்போராட்டமாக துவங்கிய இதை  சில சமூக விரோதிகள் தங்கள் தேச விரோத கருத்துக்களை விதைக்க பயன்படுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்ற சிலர் தனி கட்சி ஒன்றை துவங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் தங்கள் முதல்வர் வேட்பாளராக  திரு. சகாயம் IAS அவர்களை முன்னிறுத்தலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

திரு. சகாயம், உள்ளாட்சி தேர்தல் வரை காத்திருந்து பிறகு முடிவெடுக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசுத்தமான அரசு வேண்டும் என்று விரும்பும் பலர், இவருக்கு பக்கபலமாக உள்ளனர். ஒரு வேளை, இவர் மறுக்கும் பட்சத்தில் மேதகு அப்துல் கலாமின் உதவியாளர், பொன்ராஜ் முன்னிறுத்தப்படலாம். 

திரு. சகாயம் அரசியலில் அடுத்த கேஜ்ரிவாலாக மாறுவாரா அல்லது காணாமல் போவாரா என்று காலம் பதில் சொல்லும். காத்திருப்போம் 

-- Satyajith

தமிழகம் தேசியத்தின் பக்கமே - பிரிவினைவாதிகள் முகத்தில் கரி பூசிய தமிழ்நாட்டு மக்கள்

தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடபட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இடங்களில் இடங்களில் நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அனைத்து ஊர்களிலும் விளையாட்டு போட்டிகள், தேசியக்கொடி அணிவகுப்புகள், இருசக்கர வாகன ஊர்வலங்கள், ரத்த தான முகாம்கள், மரம் நடும் விழாக்கள் என்று களைக்கட்டியது குடியரசு தின விழா. அரசு யாரையுமே நிர்பந்திக்கவில்லை, இவை அனைத்துமே பொதுமக்கள் தன்னார்வத்துடன் நடத்தியவை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தேசபக்த தீச்சுடர் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்து மக்களும் சொல்வது இமயம் முதல் குமரி வரை இது ஒரே தேசம், ஒரே மக்கள் 

தனி தமிழ்நாடு வேண்டும், குடியரசு தினத்தை புறக்கணிப்போம், கருப்பு கொடி ஏற்றுவோம் என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்ட பிரிவினைவாதிகள், தமிழகத்தில் உற்சாகத்துடன் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களை பார்த்துவிட்டு, மிரண்டுபோய் உள்ளார்கள். தங்களது உரிமைக்காக அமைதியான முறையில் நியாயமாக போராடிய மக்களை எப்படியாவது தங்கள் வலையில் வீழ்த்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட பிரிவினைவாதிகள் முகத்தில், மக்கள் காரி பூசிவிட்டனர். அவர்கள் விடுத்த அறைகூவலை பொதுமக்கள் யாரும் சட்டை செய்யவில்லை.

கட்டபொம்மன், வேலுநாச்சியார், திருப்பூர் குமரன், பாரதியார், வ.ஊ.சி, வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா என்று எண்ணிலடங்கா தேசபக்தர்கள் தோன்றிய பூமி, சுவாமி விவேகானந்தர் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய பூமி இது. இவ்வளவு பெருமைகளை கொண்ட தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள், என்றுமே தாங்கள் பாரத தாயின் அங்கம் என்பதை மறக்கமாட்டார்கள்.

ஏழு கோடி மக்கள் கொண்ட தமிழ்நாட்டை, சில ஆயிரம் பிரிவினைவாதிகளால் அசைக்கக்கூட முடியாது. வெளிநாட்டிடம் கூலி பெற்று உள்நாட்டில் குழப்பம் விளைவிக்க எண்ணும் அமைப்பினர், இனியாவது அடங்கி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்களே அவர்களை அடித்து விரட்டுவார்கள்.

-- Satyajith






Thursday, January 26, 2017

குறி வைக்கப்படும் ஹிந்து பாரம்பரிய விழாக்கள்



ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று குரலெழுப்பும் பலருக்கும் தெரியும், இந்த தடைக்கு அச்சாரம் போட்டது திமுக மற்றும் காங் என்று. அது ஒரு புறம் இருக்க, இது தமிழகம் மட்டும் சார்ந்த பிரச்சனையா? இல்லை. இதில் அரசியலையும் தாண்டி பெரிய பூதம் ஒன்று உள்ளது. அது தான் நமது ஹிந்து பாரம்பரியத்தை அழிப்பது. தமிழகம் மட்டுமல்லாது தேசம் முழுவதும் இதற்காக பல இயக்கங்கள் வேலை செய்கின்றன.ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயத்திற்கே சவால் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் 
இங்கே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தது பீட்டா. மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தவுடனே மீண்டும் நீதிமன்றம் சென்று தடையானை பெற்றது. மத்தியில் ஆளும்  அரசு, உச்சநீதிமன்றத்தை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது.

கேரளா 
திருச்சூர் பூரம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏப்ரல் / மே மாதத்தில் அங்குள்ள அனைத்து கோவில்களும் விழாக்கோலம் போனும். இசை, இயல், நடனம் என்று களை கட்டும். கோவில் யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும். யானைகளை துன்புறுத்தப்படுகின்றன என்று கூறி இந்த பீட்டா நீதிமன்றம் சென்றது 

கர்நாடகா / பஞ்சாப் / ஹரியானா 
அனைத்து மாநிலங்களிலும் மகர சங்கராந்தியை ஒட்டி ரேக்ளா போட்டி நடைபெறும். இங்கு ஜல்லிக்கட்டு போலவே அங்கும் ரேக்ளா பந்தயம், ஹிந்துக்களின் கலாச்சாரத்தோடு தொடர்பு உடையது. இதற்கும் தடை கோரி வழக்கு தொடுத்தது பீட்டா 

ஆந்திரா 
மகர சங்கராந்தியை ஒட்டி நடத்தப்படும் சேவல் சண்டை பன்னெடுங்காலமாக நடைபெறுகிறது. சேவல்கள் காயமடைகின்றன என்று கூறி நீதிமன்றத்தில் தடை பெற்றது பீட்டா. அதே போல அங்கே நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் தடை பெற்றுள்ளது இந்த அமைப்பு 

மஹாராஷ்டிரா / உத்திர பிரதேசம் 
கிருஷ்ண ஜெயந்தி அன்று மும்பை, புனே, மதுராவில் உறியடி நடைபெறும். மிக உயரத்தில் தொங்க விடப்படும் உரியை உடைக்க பெரிய போட்டி நடக்கும். லட்சக்கணக்கானோர் இதை பார்வையிட குழுமுவர். போட்டியாளர்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறி மனித உரிமை ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள்.

வட மாநிலங்கள் 
ஹோலி கொண்டாட்டத்தின் பொழுது தூவப்படும் வண்ண பொடிகள் கண் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று கூறி தடை கோரினார்கள். ஒவ்வொரு ஹோலி சமயமும் விவாதம் நடத்தி, ஹோலி கொண்டாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் இந்த என்.ஜி.ஓ (NGO) நிறுவனங்கள். 

மேற்கு வங்கம் 
இங்கே உச்சக்கட்டமாக அரசே முன்னின்று ஹிந்து பண்டிகைகளுக்கு தடை விதிக்கிறது. துர்கா பூஜா ஊர்வலத்திற்கு தடை, காரணம் கேட்டால் மீலாடி நபி வருகிறது என்று சப்பை கட்டு. 

தேசம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த கெடுபிடி உள்ளது, பிள்ளையாரை கடலில் கரைப்பதால் சுற்றுசூழல் மாசும என்று பேசும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் என்கிற பெயரில் சில சதிகாரர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டுளார்கள்.

மிருகநல ஆர்வலர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்பாளர்கள் என்று ஆங்காங்கே வெவ்வேறு அவதாரம் எடுத்து நமது பாரம்பரியத்தை குழி தோண்டி புதைக்க கிளம்பியுள்ள தீய சக்திகளை கண்டறிய வேண்டியது முக்கியம். ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழகத்தின் பிரச்சனையாக பார்க்காமல், தேசத்தின், நமது கலாச்சாரத்தின், பண்பாட்டின் பிரச்சனையாக பார்க்க வேண்டும்.

நமது பாராம்பரியமான ஜல்லிக்கட்டை காக்க போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஆதரிக்கும் அதே வேளையில், அவர்கள் சதிகாரர்களின் வலையில் விழாமல் இருப்பது முக்கியம்.  இங்கே உள்ள சிலர், இந்த அறப்போராட்டத்தை திசை திருப்பி, தனி நாடு வேண்டும், இந்தியாவை புறக்கணிக்கிறோம், தேசியக்கொடியை அரைகம்பத்தில் பறக்க விடுவோம், கொடியை எரிப்போம் என்று தூண்டிவிடுகிறார்கள். அவர்களை புறந்தள்ள வேண்டும்