Saturday, January 28, 2017

அடுத்த அரவிந்த் கேஜ்ரிவாலாகிறாரா சகாயம் IAS?

மதுரை கிரானைட் வழக்கை விசாரித்ததன் மூலம், தான் ஒரு நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருக்கிறார் திரு. சகாயம் IAS அவர்கள்.

2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அவரை முதல்வர் வேட்பாளராக சில இளைஞர்கள் அறிவித்தனர், ஆனால் அந்த சமயம், அதை திரு.  சகாயம், ஏற்றுக்கொள்ளவில்லை. 

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, அதிமுக பலம் குன்றி இருப்பது உண்மையே. பொதுச்செயலாளர், முதல்வர் என்று 2   அதிகார மையங்கள் உள்ளன. மேலும் தீபா என்று ஒருவரும் சில நிர்வாகிகளை இழுத்து வருகிறார்.

இழந்ததை பிடிக்க திமுகவும் போராடிவரும் நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது.  அறப்போராட்டமாக துவங்கிய இதை  சில சமூக விரோதிகள் தங்கள் தேச விரோத கருத்துக்களை விதைக்க பயன்படுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்ற சிலர் தனி கட்சி ஒன்றை துவங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் தங்கள் முதல்வர் வேட்பாளராக  திரு. சகாயம் IAS அவர்களை முன்னிறுத்தலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

திரு. சகாயம், உள்ளாட்சி தேர்தல் வரை காத்திருந்து பிறகு முடிவெடுக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசுத்தமான அரசு வேண்டும் என்று விரும்பும் பலர், இவருக்கு பக்கபலமாக உள்ளனர். ஒரு வேளை, இவர் மறுக்கும் பட்சத்தில் மேதகு அப்துல் கலாமின் உதவியாளர், பொன்ராஜ் முன்னிறுத்தப்படலாம். 

திரு. சகாயம் அரசியலில் அடுத்த கேஜ்ரிவாலாக மாறுவாரா அல்லது காணாமல் போவாரா என்று காலம் பதில் சொல்லும். காத்திருப்போம் 

-- Satyajith

No comments:

Post a Comment