Saturday, January 28, 2017

தமிழகம் தேசியத்தின் பக்கமே - பிரிவினைவாதிகள் முகத்தில் கரி பூசிய தமிழ்நாட்டு மக்கள்

தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடபட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இடங்களில் இடங்களில் நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அனைத்து ஊர்களிலும் விளையாட்டு போட்டிகள், தேசியக்கொடி அணிவகுப்புகள், இருசக்கர வாகன ஊர்வலங்கள், ரத்த தான முகாம்கள், மரம் நடும் விழாக்கள் என்று களைக்கட்டியது குடியரசு தின விழா. அரசு யாரையுமே நிர்பந்திக்கவில்லை, இவை அனைத்துமே பொதுமக்கள் தன்னார்வத்துடன் நடத்தியவை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தேசபக்த தீச்சுடர் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்து மக்களும் சொல்வது இமயம் முதல் குமரி வரை இது ஒரே தேசம், ஒரே மக்கள் 

தனி தமிழ்நாடு வேண்டும், குடியரசு தினத்தை புறக்கணிப்போம், கருப்பு கொடி ஏற்றுவோம் என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்ட பிரிவினைவாதிகள், தமிழகத்தில் உற்சாகத்துடன் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களை பார்த்துவிட்டு, மிரண்டுபோய் உள்ளார்கள். தங்களது உரிமைக்காக அமைதியான முறையில் நியாயமாக போராடிய மக்களை எப்படியாவது தங்கள் வலையில் வீழ்த்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட பிரிவினைவாதிகள் முகத்தில், மக்கள் காரி பூசிவிட்டனர். அவர்கள் விடுத்த அறைகூவலை பொதுமக்கள் யாரும் சட்டை செய்யவில்லை.

கட்டபொம்மன், வேலுநாச்சியார், திருப்பூர் குமரன், பாரதியார், வ.ஊ.சி, வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா என்று எண்ணிலடங்கா தேசபக்தர்கள் தோன்றிய பூமி, சுவாமி விவேகானந்தர் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய பூமி இது. இவ்வளவு பெருமைகளை கொண்ட தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள், என்றுமே தாங்கள் பாரத தாயின் அங்கம் என்பதை மறக்கமாட்டார்கள்.

ஏழு கோடி மக்கள் கொண்ட தமிழ்நாட்டை, சில ஆயிரம் பிரிவினைவாதிகளால் அசைக்கக்கூட முடியாது. வெளிநாட்டிடம் கூலி பெற்று உள்நாட்டில் குழப்பம் விளைவிக்க எண்ணும் அமைப்பினர், இனியாவது அடங்கி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்களே அவர்களை அடித்து விரட்டுவார்கள்.

-- Satyajith






No comments:

Post a Comment