Thursday, January 28, 2021

காட்டுப்பள்ளி துறைமுகத்தை மோடி தான் அதானிக்கு விற்றாரா?


இந்த பதிவு துறைமுகம் விரிவாக்கம் வேண்டுமா, இல்லையா என்பது பற்றியல்ல.  இந்த சர்ச்சை கிளம்ப காரணம் யார் என்பதே.


ஏப்ரல் 15, 2008 அன்று டிட்கோ மற்றும் எல்&டி நிறுவனம் இடையே காட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது.  3% பங்கு டிட்கோ, 97% எல்&டி வசம்.  அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 




அப்போது சமர்ப்பிக்கப்பட்ட EIA, துறைமுகம் பிற்காலத்தில் விரிவாக்கப்படும் என்றும், மீன்பிடி தொழில் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தது. 2008ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்  அரசும் ஏற்றுக் கொண்டது     









மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த 2013ல் இந்த துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு,  அதானி,  எல்&டி நிறுவனத்திடம்  இருந்து துறைமுகத்தை வாங்கினார் 

ஒரு வேளை அதானி வாங்கியிருக்காவிட்டால் எல்&டி இந்த விரிவாக்கத்தை செய்திருக்கும். வேறு யார் வாங்கியிருந்தாலும் இதை செய்திருப்பார்கள்.


மேலும் சில லிங்குகள் 



நான் பொய் சொல்கிறேன் என்றே திமுகவினர் சொல்லட்டும். ஆனால் இது திமுக ஆட்சியில் வெளியான பத்திரிகை குறிப்பு. பக்கம் 6 பார்க்க 



சில கேள்விகள் 

1. அதானி கார்ப்பரேட் என்றால், திமுக ஒப்பந்தம் போட்ட எல்&டி கார்ப்பரேட் இல்லையா? என்ன லாஜிக் என்று போராளீஸ் விளக்கவும்.

2. அதானி மோடியின் ஆள் என்று கூறும் காம்ரேட்ஸ், கேரளா விழின்ஜம் துறைமுகத்தை அதே அதானியிடம் கொடுத்தது ஏன் ?

3.  2008ல் திமுக போட்ட ஒப்பந்தம், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கொடுத்த clearance இதற்கு மோடி எப்படி பொறுப்பு ?


Saturday, January 2, 2021

கொரோனா தடுப்பூசி கட்டாயமா ?




கவனிக்க 
இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எனது சொந்த கருத்துக்கள். நான் எந்த அரசு நிறுவனத்திலும் இல்லை, எனக்கு அரசில் யாரையும் தெரியாது. தான் தோன்றித்தனமாக நானே எழுதியது

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய சூழலில் (ஜனவரி 15 2021) கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்று 2 கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் கிடைத்துள்ளது.  பலருக்கு நிம்மதி, சிலருக்கு குழப்பம், சிலருக்கோ  'கொரோனா என்பது பொய், தடுப்பூசி என்பது மருத்துவ நிறுவனங்களின் சூழ்ச்சி'.


கொரோனா தடுப்பூசி கட்டாயமா ?

தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் போடாமல் கூட 100 வயது வாழலாம். என்ன வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது, ஏனெனில் சில நாடுகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு விசா அளிக்க விரும்பவில்லையாம். இது உடனே சாத்தியப்படாது, ஆனால் 2 வருடத்தில் நடக்கலாம். தடுப்பூசி பரவலாக வந்து, அதன் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு நிரூபணம் ஆகிவிட்டால், சில விஷயங்களை எதிர் கொள்ள நேரிடலாம்


1. என் வீட்டிற்குள் தடுப்பூசி போடாத நபரை அனுமதிக்க நான் மறுக்கலாம், எனக்கு முழு உரிமை உண்டு 


2. நான் ஒரு பெட்டி கடை நடத்தினாலும் சரி, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வியாபாரம் நடத்தினாலும், தடுப்பூசி போடாத ஊழியர் மற்றும் வாடிக்கையாளருக்கு அனுமதி மறுக்க முடியும். எனக்கு எனது மற்ற ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நலன் முக்கியம் 


3. சினிமா தியேட்டர், கோவில்கள், ஹோட்டல்கள் என அனைவருமே தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி மறுக்க முடியும் 


4. இப்போதே கூட, டிக்கெட் வைத்திருந்தாலும் சாதாரண இருமலோ அல்லது ஜுரம் இருந்தாலும் ரயில் மற்றும் விமானத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது . 2 வருடம் கழித்து தடுப்பூசி இல்லாதவர்களுக்கு டிக்கெட் கொடுக்க முடியாது என அவரால் சொல்லலாம்.


என் உடல், என் உரிமை பொங்கல்ஸ் எல்லாம் செல்லுபடியாகாது. அரசு உங்களை கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் அதே சமயம் மற்றவர்களின் பாதுகாப்பிற்காக இப்படி சட்டம் கொண்டு வர முடியும்.   


ஒருவர் தடுப்பூசி போட்டவரா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது 

 

ஊசி போட்ட பிறகு ஒரு QR code மற்றும் ஒரு எண் நமக்கு அனுப்பப்படும். அதுவே ஆதாரம்


சினிமா தியேட்டர், ஓட்டல்  உட்பட எங்கு செல்ல வேண்டுமானலும், இந்த QR scanning கட்டாயமாக்க தனியாருக்கு உரிமை உள்ளது. ஒரு வேளை ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள், vaccination எண்ணை சொன்னால், ஆரோக்ய சேது, Co-win அல்லது வேறு app அல்லது website அல்லது sms மூலம் சரி பார்த்த பிறகு, உங்களை உள்ளே அனுமதிக்கலாம். 


தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் போது, இந்த எண்ணை குறிப்பிட சொல்லவும் வாய்ப்புள்ளது. 


நான் எழுதியதில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஆனால் அனுபவம் மிக்க அரசு அதிகாரிகள், தனி நபர் உரிமை பாதிக்காத அதே நேரம், பொது மக்கள் நலனுக்கும் பங்கம் வராத வகையில் சட்டம் இயற்ற முடியும் 

Is it mandatory to take Corona Vaccine?



Disclaimer
The opinions expressed in this article are my personal opinion. I hold no position in any Govt or regulatory service. I have no connections in Govt too

-----------------------------------------------------------------------------------------------------------

We are all set to begin vaccination programme tomorrow (16th Jan 2020). Many are happy that Vaccines are out, few are not certain and we have this usual No mask brigade who say, 'Corona is hoax and Vaccine is a conspiracy by Pharma giants'.


'Is it mandatory to take Vaccine'?  

Govt has clearly said, it is not compulsory. But remember,  Aadhaar too is not compulsory and without Aadhaar, life is not the same.  Same can be with the Vaccine too. Few countries are already looking at an option of Vaccine stamp in passport before issuing Visa.  This may not come into effect immediately, but once Vaccines are available for everyone, their efficacy and safety is proven, this is possible.  And even if a person is not a traveller, still he / she can face challenges on multiple fronts.


1. I have every right to deny entry into my house to a person who is not vaccinated

2. Flats / Associations too can deny entry to visitors, if they are not vaccinated

3. Businesses, be it a petty shop or a billion dollar company, can deny entry to customers, employees if they are not vaccinated. Because safety of other employees and customers are paramount importance

4. Theatres, Beaches, Hotels, Temples, Public places too can pose such a restriction. 

5. Flights, Trains, Buses too can refuse boarding to a passenger who is not vaccinated. 

But isn't this against law or fundamental rights? No.  Govt can always invoke Epidemic Act or Public Safety Act to bring this.  Even now, only those are asymptomatic are allowed in flights, trains and other public places. 


How to find out whether a person is vaccinated or not?

Any person getting vaccinated will get  QR code certification or number. Suppose I enter a movie hall, I may have to scan the QR code and key in the number in App or Portal to get access.


For those who don't own a smart phone,  just give your vaccination number.  Aarokya Setu 2.0 or Co-Win App or any other App / Portal can be used to check. Or even a simple SMS to a designated number can give the status. (like how we use it for VAHAN) 


Whatever I have written has many pitfalls, but experts can easily address this, bring in fool-proof arrangement that doesn't violate privacy / fundamental rights, at the same time serve public interest