கவனிக்க
இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எனது சொந்த கருத்துக்கள். நான் எந்த அரசு நிறுவனத்திலும் இல்லை, எனக்கு அரசில் யாரையும் தெரியாது. தான் தோன்றித்தனமாக நானே எழுதியது
இன்றைய சூழலில் (ஜனவரி 15 2021) கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்று 2 கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் கிடைத்துள்ளது. பலருக்கு நிம்மதி, சிலருக்கு குழப்பம், சிலருக்கோ 'கொரோனா என்பது பொய், தடுப்பூசி என்பது மருத்துவ நிறுவனங்களின் சூழ்ச்சி'.
கொரோனா தடுப்பூசி கட்டாயமா ?
தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் போடாமல் கூட 100 வயது வாழலாம். என்ன வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது, ஏனெனில் சில நாடுகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு விசா அளிக்க விரும்பவில்லையாம். இது உடனே சாத்தியப்படாது, ஆனால் 2 வருடத்தில் நடக்கலாம். தடுப்பூசி பரவலாக வந்து, அதன் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு நிரூபணம் ஆகிவிட்டால், சில விஷயங்களை எதிர் கொள்ள நேரிடலாம்
1. என் வீட்டிற்குள் தடுப்பூசி போடாத நபரை அனுமதிக்க நான் மறுக்கலாம், எனக்கு முழு உரிமை உண்டு
2. நான் ஒரு பெட்டி கடை நடத்தினாலும் சரி, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வியாபாரம் நடத்தினாலும், தடுப்பூசி போடாத ஊழியர் மற்றும் வாடிக்கையாளருக்கு அனுமதி மறுக்க முடியும். எனக்கு எனது மற்ற ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நலன் முக்கியம்
3. சினிமா தியேட்டர், கோவில்கள், ஹோட்டல்கள் என அனைவருமே தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி மறுக்க முடியும்
4. இப்போதே கூட, டிக்கெட் வைத்திருந்தாலும் சாதாரண இருமலோ அல்லது ஜுரம் இருந்தாலும் ரயில் மற்றும் விமானத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது . 2 வருடம் கழித்து தடுப்பூசி இல்லாதவர்களுக்கு டிக்கெட் கொடுக்க முடியாது என அவரால் சொல்லலாம்.
என் உடல், என் உரிமை பொங்கல்ஸ் எல்லாம் செல்லுபடியாகாது. அரசு உங்களை கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் அதே சமயம் மற்றவர்களின் பாதுகாப்பிற்காக இப்படி சட்டம் கொண்டு வர முடியும்.
ஒருவர் தடுப்பூசி போட்டவரா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது
ஊசி போட்ட பிறகு ஒரு QR code மற்றும் ஒரு எண் நமக்கு அனுப்பப்படும். அதுவே ஆதாரம்
சினிமா தியேட்டர், ஓட்டல் உட்பட எங்கு செல்ல வேண்டுமானலும், இந்த QR scanning கட்டாயமாக்க தனியாருக்கு உரிமை உள்ளது. ஒரு வேளை ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள், vaccination எண்ணை சொன்னால், ஆரோக்ய சேது, Co-win அல்லது வேறு app அல்லது website அல்லது sms மூலம் சரி பார்த்த பிறகு, உங்களை உள்ளே அனுமதிக்கலாம்.
தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் போது, இந்த எண்ணை குறிப்பிட சொல்லவும் வாய்ப்புள்ளது.
நான் எழுதியதில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஆனால் அனுபவம் மிக்க அரசு அதிகாரிகள், தனி நபர் உரிமை பாதிக்காத அதே நேரம், பொது மக்கள் நலனுக்கும் பங்கம் வராத வகையில் சட்டம் இயற்ற முடியும்
No comments:
Post a Comment