இந்த பதிவு துறைமுகம் விரிவாக்கம் வேண்டுமா, இல்லையா என்பது பற்றியல்ல. இந்த சர்ச்சை கிளம்ப காரணம் யார் என்பதே.
ஏப்ரல் 15, 2008 அன்று டிட்கோ மற்றும் எல்&டி நிறுவனம் இடையே காட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது. 3% பங்கு டிட்கோ, 97% எல்&டி வசம். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது சமர்ப்பிக்கப்பட்ட EIA, துறைமுகம் பிற்காலத்தில் விரிவாக்கப்படும் என்றும், மீன்பிடி தொழில் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தது. 2008ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் ஏற்றுக் கொண்டது
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த 2013ல் இந்த துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அதானி, எல்&டி நிறுவனத்திடம் இருந்து துறைமுகத்தை வாங்கினார்
ஒரு வேளை அதானி வாங்கியிருக்காவிட்டால் எல்&டி இந்த விரிவாக்கத்தை செய்திருக்கும். வேறு யார் வாங்கியிருந்தாலும் இதை செய்திருப்பார்கள்.
மேலும் சில லிங்குகள்
நான் பொய் சொல்கிறேன் என்றே திமுகவினர் சொல்லட்டும். ஆனால் இது திமுக ஆட்சியில் வெளியான பத்திரிகை குறிப்பு. பக்கம் 6 பார்க்க
சில கேள்விகள்
1. அதானி கார்ப்பரேட் என்றால், திமுக ஒப்பந்தம் போட்ட எல்&டி கார்ப்பரேட் இல்லையா? என்ன லாஜிக் என்று போராளீஸ் விளக்கவும்.
2. அதானி மோடியின் ஆள் என்று கூறும் காம்ரேட்ஸ், கேரளா விழின்ஜம் துறைமுகத்தை அதே அதானியிடம் கொடுத்தது ஏன் ?
3. 2008ல் திமுக போட்ட ஒப்பந்தம், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கொடுத்த clearance இதற்கு மோடி எப்படி பொறுப்பு ?
No comments:
Post a Comment