பள்ளிக்கூடங்களை நோக்கி ஏழைகள் வரவில்லையென்றால், ஏழைகளை நோக்கி பள்ளிக்கூடங்கள் செல்லவேண்டும் என்கிற விவேகானந்தரின் கூற்றுக்கு ஏற்ப, 1985ல் அப்பொழுதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டம்தான் ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் அதுவும் குறிப்பாக பட்டியியலினத்தவர் அதிகம் வாழும் பகுதிகளில், மாணவர்களுக்கு தரமான கல்வியை,மிக மிக குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
இது ஒரு உறைவிட பள்ளி. ஒவ்வொரு பள்ளியிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 80 மாணவர்கள் (2 செக்ஷன்கள், ஒரு செக்ஷனுக்கு 40 குழந்தைகள்). 6 முதல் 8ம் வகுப்பு வரை முற்றிலும் இலவசம், அதன் பிறகு மாதம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு அதுவும் இல்லை. கல்வியின் தரமோ அதி அற்புதம். அத்துடன் நூலகம், கணினி ஆய்வகம் , கால்பந்து, வாலிபால், நீச்சல், ஹாக்கி, கிரிக்கெட், கபடி போன்றவற்றிலும் பயிற்சிகள் உண்டு.
தமிழகம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலகங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி 598 நவோதயா பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மலைவாழ் மக்களுக்கென்றே பிரத்யேக பள்ளி ஒன்று திரிபுராவில் இயங்கிவருகிறது.
இது ஒரு உறைவிட பள்ளி. ஒவ்வொரு பள்ளியிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 80 மாணவர்கள் (2 செக்ஷன்கள், ஒரு செக்ஷனுக்கு 40 குழந்தைகள்). 6 முதல் 8ம் வகுப்பு வரை முற்றிலும் இலவசம், அதன் பிறகு மாதம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு அதுவும் இல்லை. கல்வியின் தரமோ அதி அற்புதம். அத்துடன் நூலகம், கணினி ஆய்வகம் , கால்பந்து, வாலிபால், நீச்சல், ஹாக்கி, கிரிக்கெட், கபடி போன்றவற்றிலும் பயிற்சிகள் உண்டு.
இதில் சேர நுழைவு தேர்வு நடத்தப்படும், அதில் வெற்றிபெறும் மாணவர் மட்டுமே சேர முடியும். (இன்று அநேக பள்ளிகளில் இடை வகுப்புக்களில் சேர நுழைவு தேர்வு உள்ளது). 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாநில மொழியில் பாடம் நடத்தப்படும் (இங்கே தமிழ் மீடியம்). 9ம் வகுப்பு முதல் இங்கிலிஷ் மீடியம். ஹிந்தி மூன்றாவது பாடமாக உள்ளது. இட ஒதுக்கீடு என்று பார்த்தால் கிராமப்புற மாணவர்களுக்கு 75% உள்ளது. பட்டியல் இனத்தவருக்கு 15%, பழங்குடி இனத்தவருக்கு 7.5%, மாற்றுத்திறனாளிகளுக்கு 3.5%, பெண்களுக்கு 33% என்று உண்டு.
இலவச கல்வி கொடு என்று போராடும் கட்சிகள் இந்த நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. எதிர்ப்பாளர்கள் சொல்லும் ஒரு முக்கிய காரணம் ஹிந்தி திணிப்பு என்கிறார்கள். ஹிந்தி பேசாத மாநிலங்களில் 8ம் வகுப்பு வரை பிராந்திய மொழிலியே பாடம் நடத்தப்படும் என்று சொல்லியாகிவிட்டது, ஹிந்தி மூன்றாவது பாடம் மட்டுமே. (ஹிந்திக்கு தேர்வு கூட இல்லை) .
ஒவ்வொரு பள்ளிக்கும் மத்திய அரசு ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு நவோதயா பள்ளிகள் நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது ஒரு அற்புதமான திட்டம் என்பதால்தான், காங் கொண்டு வந்தபோதும் பாஜகவோ, கம்யூனிஸ்ட்களோ ஏற்றுக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க எண்ணிய திராவிட கட்சிகள் இதை எதிர்த்தன. இருக்கும் திராவிட கட்சிகள் பத்தாது என்று சீமான், திருமா உட்பட பல கோமாளிகள் புறப்பட்டுள்ளார்கள். இவர்கள் நவோதயாவை எதிர்க்க ஒரே காரணம், தங்கள் கட்சியின் எதிர்காலத்தை நினைத்துதான்.
அனைவரும் படித்து புத்திசாலியாகிவிட்டால் இந்த கோமாளிகள் பின்னால் யாரும் செல்லமாட்டார்கள். பிறகு போஸ்டர் யார் ஓட்டுவார்கள்? பேனர் யார் வைப்பார்கள்? நாற்காலி யார் அடுக்கறது? எடுபிடி யார் செய்வது? எப்படி கட்சி நடத்தறது? இந்த கவலை தான் இவர்களை ஒவ்வொரு நல்ல திட்டத்திற்கும் எதிர்ப்பு காட்ட தூண்டுகிறது.
தமிழனை முன்னேறிவிட்டால் தங்கள் பாடு திண்டாட்டம் என்று கருதி நல்ல விஷயங்களை தடுக்கும் கட்சிகளும், சில்லரை அமைப்புகளும் தான் தமிழ்நாட்டின் துரோகிகள்.


No comments:
Post a Comment